Share via:
பியூஷ் கோயல் இன்று சென்னைக்கு வந்து அதிமுகவுடன் கூட்டணிப் பேச்சுவார்த்தை
நடத்தப்படும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், பேச்சுவார்த்தையை முடிவு செய்வதற்கு
எடப்பாடி பழனிசாமி இன்று டெல்லிக்குப் போயிருக்கிறார்.
தமிழ்நாட்டில் வரும் ஏப்ரல் 23ம் தேதி சட்டசபைத் தேர்தல் நடைபெற
உள்ளது. இந்த முறை எடப்பாடி பழனிசாமி பா.ஜ.க.வுடன் கூட்டணி அமைத்து போட்டியிடுகிறார்.
விஜய் தனித்து நிற்பது உறுதியாகியிருப்பதால் தமிழகத்தில் நான்கு முனை போட்டி உறுதியாகியுள்ளது.
தி.மு.க கூட்டணியில் ஓரளவிற்கு தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை
முடிவடைந்த நிலையில் அ.தி.மு.க கூட்டணியில் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை தொடங்கிவிட்டது
என்பதை உறுதி செய்யும் வகையில் அ.தி.மு.க பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி இன்று
டெல்லிக்கு புறப்படுகிறார்.
இன்று மாலை உள்துறை அமைச்சர் அமித் ஷாவை சந்தித்து தொகுதி பங்கீடு
குறித்து பேச்சுவார்த்தை நடத்துவார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
கடந்த முறை பாஜகவுக்கு 20 தொகுதிகள் கொடுக்கப்பட்டது. இந்த தேர்தலில்
30 சீட் எதிர்பார்க்கிறார்கள். எடப்பாடி 24 சீட் கொடுக்க முன்வந்துள்ளார். இந்த இடைவெளியை
சரிக்கட்டவே இன்று பேச்சுவார்த்தை நடப்பதாக சொல்லப்படுகிறது. அதேபோல் டிடிவி தினகரன்
10 சீட் எதிர்பார்க்கிறார், அவருக்கு 6 சீட் கொடுப்பதற்கு அதிமுக முன்வந்துள்ளது.
இந்த இரண்டு கட்சிகளுக்கும் எத்தனை சீட் என்பது இன்றைய தினம் பேச்சுவார்த்தையில்
உறுதியாகிவிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
