News

கூட்டணியை கோட்டை விட்ட விஜய்… வேட்பாளர்கள் எங்கேப்பா..?

Follow Us

எடப்பாடி பழனிசாமியை டெல்லிக்கு வரவழைத்து மிரட்டும் பாஜகவினால் என்.ஆர். காங்கிரஸ் ரங்கசாமியை அசைக்க முடியவில்லை. அவருக்காக காத்துக்கிடப்பது படு சர்ச்சையாக மாறியிருக்கிறது.

கடந்த 2021 சட்டப்பேரவைத் தேர்தலில் என்.ஆர்.காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி அமைத்து புதுவையில் வெற்றிபெற்ற பா.ஜ.க, முதல்வர் ரங்கசாமி தலைமையிலான அமைச்சரவையிலும் பங்கெடுத்தது.

ஆனால், அந்தக் கூட்டணி அடுத்து வந்த 2024 நாடாளுமன்றத் தேர்தலில் படுதோல்வியை சந்தித்தது. 2026 சட்டமன்றத் தேர்தலுக்கான கூட்டணிப் பேச்சுவார்த்தையை தொடங்கியது. ஆனால் அதற்கு சிறிதும் பிடி கொடுக்காமல் பா.ஜ.க தரப்பை இழுத்தடித்து வந்தார் ரங்கசாமி.

புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து அளிக்கவில்லை என்ற கோபத்தைக் காட்டுவதாக சொல்லப்படுகிறது. இதையடுத்து அவசரமாக மாநில அந்தஸ்து கொடுக்க முன்வந்ததுள்ளதாக சொல்லப்படுகிறது என்றாலும், ரங்கசாமி அசராமல் ஒவ்வொரு கோயிலாக சுற்றிக்கொண்டு இருக்கிறார்.

வரலாற்றில் பாஜகவை ஒரு மாநில முதல் அமைச்சர் கதறவிட்டார் என்ற செய்தியை உருவாக்கி வருகிறார். பாஜகவுடனான கூட்டணிப் பேச்சுவார்த்தை சுமூக முடிவை எட்டாத நிலையில், தனித்துக் களமிறங்கவும் தயாராக இருக்கிறார்.

இப்போது கதிகலங்கிப் போயிருக்கும் பாஜக, அவரை சமாதானப்படுத்தும் முயற்சியில் இறங்கியிருக்கிறது. இவருக்காக லாட்டரி கட்சியைத் தள்ளிவைக்கவும் தயாராகிவிட்டது.

விஜய்யுடன் கூட்டணி வைப்பதற்கு ரங்கசாமி தயாராக இருப்பதாலே இப்படி விளையாட்டு காட்டுவதாக சொல்லப்படுகிறது. இதற்காகவே விஜய்யும் ஆர்வத்துடன் காத்திருக்கிறார்.  எதுவானாலும் இன்று முடிவுக்கு வந்துவிடும். 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share via
Copy link