News

கூட்டணியை கோட்டை விட்ட விஜய்… வேட்பாளர்கள் எங்கேப்பா..?

Follow Us

இத்தனை ஆண்டு காலம் திமுகவுக்கு ஆதரவாக இருந்த திருமாவளவனின் விசிகவுக்கு சீட் பிரித்துக் கொடுப்பதில் கடுமையான சிக்கல் நிலவுகிறது. புதிதாக தேமுதிக, கமல் கட்சிகள் வந்திருப்பதால் சீட்டைக் குறைக்கச் சொல்கிறார்கள்.

விடுதலை சிறுத்தைகள் கட்சியைவிட தேமுதிகவுக்கு கூடுதல் தொகுதிகள் கிடைக்கும் என்று பேசப்படுவது விசிகவுக்கு இழைக்கப்படும் அநீதி என்று சிறுத்தைகள் கொதிக்கிறார்கள்.

தேமுதிக கடந்த தேர்தலில் 0.4% பெற்றிருந்தது. ஆனால் 9 தொகுதிகளாம், ராஜ்ய சபா சீட்டாம். கடந்த தேர்தலில் 6 சீட் பெற்ற விசிகவுக்கு 5 தொகுதிகளாம். இது என்ன நியாயம் என்கிறார்கள்.

ஏனென்றால், திமுக கூட்டணியில் திமுகவிற்கு மிக பக்கபலமாக இருந்தது விடுதலை சிறுத்தை கட்சிகள் தான் அதுவும் சொல்ல போனால் தொல் திருமாவளவன் அவர்கள் தான் எந்த பிரச்சினை வந்தாலும் திமுகவிற்கு ஆதரவு கொடுப்பார். ஆனால், அவருக்கு ஒரு தொகுதியை கூடுதலாக ஒதுக்க திமுக யோசிக்கின்றது.

ஆனால் பத்து வருடங்களாக தொடர் தோல்வியை சந்தித்து வரும் தேமுதிகவிற்கு 9 தொகுதிகள் பிளஸ் ஒரு ராஜ்ய சபாவையும் திமுக ஒதுக்கி உள்ளதாக தகவல் வருகிறது. இதனால் விடுதலை சிறுத்தை கட்சியினர் மிகுந்த வருத்தத்தில் இருக்கிறார்கள் எதற்காக நாம் கூட்டணியில் இருக்க வேண்டும் எனவும் கொதிக்கிறார்கள் அவருடைய தொண்டர்கள்.

இது விசிக கட்சியினருக்கு திமுக செய்யும் மிகப்பெரிய துரோகம் எனவும் இரண்டாம் கட்ட தலைவர்களும் பேசுகின்றார்கள்.  இதற்கு திருமா ஒரு வீடியோ வெளியிட்டு இருந்தாலும் சிறுத்தைகள் கொதிப்பு அடங்கவில்லை.

அதேநேரம் திமுகவினர், ‘’இந்த கூட்டணி அரசியல் கணக்கு அல்ல, சமூக நலன் சார்ந்த நிலைப்பாடு. அண்ணன் திருமாவை தலைவர் ஸ்டாலின் விட்டு விடமாட்டார். அதுபோல அண்ணன் திருமாவுவும் இந்த கூட்டணியை எளிதில் விடமாட்டார். திமுக–விசிக கூட்டணி என்பது தமிழ்நாட்டின் முன்னேற்றத்திற்கான ஒன்று..’’ என்று சமாளிக்கிறார்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share via
Copy link