News

கூட்டணியை கோட்டை விட்ட விஜய்… வேட்பாளர்கள் எங்கேப்பா..?

Follow Us

வளைகுடா போர் காரணமாக பெட்ரோல், டீசல் கிடைப்பதில் எக்கச்சக்க சிக்கல் நிலவி வருகிறது. இப்படிப்பட்ட சூழலிலும் பெட்ரோல், டீசல் விலை உயரவில்லை, வீட்டு சிலிண்டர் விலை உயரவில்லை. எல்லாமே மோடிஜியின் ராஜதந்திரம் என்று பெருமை பேசிக்கொண்டு இருக்கிறார்கள்.

உண்மை என்னவென்றால், 5 மாநிலத் தேர்தலுக்காகவே பெட்ரோல் விலை உயர்த்தப்படவில்லை. கையிருப்பு கொண்டு இன்னும் இரண்டு மாதங்கள் தாக்குப்பிடிக்க முடியும் என்பதால் மோடிஜி அமைதியாக காத்திருக்கிறார் என்கிறார்கள்.

அதேநேரம், தொழிற்சாலைகளுக்கான டீசல் விலையை ஒரு லிட்டருக்கு 22 ரூபாய் உயர்த்தி விட்டது பாஜக அரசு. 86 ரூபாயிலிருந்து 109 ரூபாய் வரை சென்று விட்டது. எனவே தொழிற்சாலைகளில் இருந்து வெளியே வரும் பொருள்களின் விலைகள் எல்லாம் நிச்சயம் 30 முதல் 40 சதவீதம் வரை உயர வாய்ப்பு இருக்கிறது.

ஐந்து மாநில தேர்தல்கள் முடிவு அடைந்தவுடன், பெட்ரோல் டீசல் எரிவாயு ஆகியவற்றின் விலை விலைகள் உயரும். பெட்ரோல் விலை சட்டென்று 150 ரூபாயாக மாற்றப்படும் என்கிறார்கள். அப்படி விலையை உயர்த்திவிட்டு அதை 140 ரூபாயாகக் குறைப்பார் மோடிஜி.

அதைத்தொடர்ந்து, காய்கறி முதல் பலசரக்கு வரை எல்லா கட்டணமும் உயரும். ஹோட்டல்கள் விலையை அதிரடியாக உயர்த்தும். ஆட்டோ கட்டணம் உட்பட அனைத்து வாடகை வாகன கட்டணங்களும் உயரும்.

அதன் தொடர்ச்சியாக ஜூன் மாதத்தில் பள்ளி கல்லூரிகள் தங்கள் கட்டணத்தை உயர்த்தவும் வாய்ப்பு இருக்கிறது. பிள்ளைகளுக்கான புத்தகங்கள் சீருடைகள் வேன் பீஸ் என எல்லாமே கூடும். எனவே, எந்த ஆடம்பரச் செலவுகளும் செய்யாமல் பணத்தை பத்திரமாக வைத்துக்கொள்ளுங்கள். போர் சீக்கிரம் முடிவுக்கு வரவில்லை என்றாம் மிகப்பெரும் பொருளாதாரச் சிக்கல் உருவாகலாம்.

ஐந்து மாநிலங்களிலும் தேர்தல் முடிந்த கையோடு பெட்ரோல், டீசல் மற்றும் சிலிண்டர் விலைகளும் உயர்த்தப்படுவது உறுதி என்பதா உடனடியாக ஐந்து மாநிலங்களிலும் தேர்தலை காலவரையறையின்றி ஒத்தி வைக்க வேண்டும் என்று ராகுல் காந்தி ஒரு புது டைப் ஆலோசனை தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share via
Copy link