News

கூட்டணியை கோட்டை விட்ட விஜய்… வேட்பாளர்கள் எங்கேப்பா..?

Follow Us

அமித் ஷாவின் கணக்கு தமிழ்நாட்டில் வேகவில்லை. அரசியல் சாணக்கியராக மாறியிருக்கிறார் எடப்பாடி கே பழனிசாமி. 50 தொகுதிகள் இல்லையென்றால் 40 தொகுதிகள் உறுதி என்று கூவிக்கொண்டிருந்த் பாஜகவை 27 இடங்களில் அடக்கியிருக்கிறார் எடப்பாடி பழனிசாமி.

இன்று அதிமுக தலைமையகத்தில் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை நடைபெற்றது. இதையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய எடப்பாடி பழனிசாமி, ‘’அதிமுக தலைமை அலுவலத்தில் அதிமுக தலைமையில் அமைக்கப்பட்ட என்டிஏ கூட்டணியில் அங்கம் வகிக்கின்ற கட்சிகளுக்கு தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை சுமூகமாக நடைபெற்று, ஒவ்வொரு கட்சிக்கும் எத்தனை தொகுதிகள் என்று வரையறுக்கப்பட்டு, அதன்படி அறிவிப்பு வெளியிடுகிறோம்.

அதிமுக கூட்டணியில் பாஜகவிற்கு 27 இடங்கள், பாமகவிற்கு 18 இடங்கள், அமமுகவிற்கு 11 இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. எங்கள் கூட்டணியில் இடம் பெற்றுள்ள மற்ற கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடந்து கொண்டிருக்கிறது. இன்று இரவுக்குள் சுமூகமாக பேச்சுவார்த்தை நிறைவு பெற்று, எத்தனை தொகுதிகள் என்று அறிவிக்கப்படும்.

திமுக தலைவரும் திமுக தலைமையில் அமைக்கப்பட்ட கூட்டணிக் கட்சிகளின் தலைவர்களும் எங்கள் கூட்டணி பற்றி விமர்சனம் செய்துகொண்டு இருக்கிறார்கள். என்டிஏ கூட்டணி என்பது உணர்வுப்பூர்வமாக அமைக்கப்பட்ட கூட்டணி. எங்கள் கூட்டணி 234 தொகுதிகளில் போட்டியிட்டு 210 இடங்களில் நிச்சயம் வெல்லும். அதிக இடங்களில் வென்று, அதிமுக ஆட்சியமைக்கும்’’ என்றார்.

 

இந்த தேர்தலில் பிஜேபியும் காங்கிரஸும் கிட்டத்தட்ட சம அளவிலான தொகுதிகளில் (27 vs 28) போட்டியிடுகின்றன. சட்டமன்றத் தேர்தல் என வரும்போது இதுவரை இவர்கள் இருவரில் காங்கிரஸின் கைதான் பெரும்பாலும் ஓங்கி இருந்திருக்கிறது. இந்த முறை காங்கிரஸை பின்னுக்குத் தள்ள பிஜேபியால் முடியுமா என்று பார்க்கலாம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share via
Copy link