News

கூட்டணியை கோட்டை விட்ட விஜய்… வேட்பாளர்கள் எங்கேப்பா..?

Follow Us

பாண்டிச்சேரிக்கு வேட்பாளர் அறிவித்துவிட்டார் விஜய். இப்போது புதுவையில் கிட்டத்தட்ட 9.44 வாக்காளர்கள் இருக்கிறார்கள். இதில் தவெகவுக்கு 4 லட்சம் பேர் ஆதரவு இருப்பதால் கண்டிப்பாக புதுவையில் தவெக ஆட்சியைப் பிடிக்கும் என்று சர்வேயை சுட்டிக்காட்டி விஜய் ரசிகர்கள் குஷியாக இருக்கிறார்கள்.

விஜய் ரசிகர்கள் கணக்குப்படி மொத்தமுள்ள 30 இடங்களில் மும்முனைப்போட்டியில் தவெக 22 இடங்களை வெல்லும் என்கிறார்கள். அதேபோல் தமிழகத்தில் 145  தொகுதிகளில் வெல்வதற்கு வாய்ப்பு உண்டு என்று அவர்கள் சர்வே கூறுகிறதாம்.

அதேநேரம், தமிழக சட்டமன்றத் தேர்தலில் களம் இறங்கும் 100 வேட்பாளர்களை உறுதி செய்துவிட்டாராம் விஜய்.இன்னும் இரண்டு நாட்களில் 234 தொகுதிகளுக்கும் வேட்பாளர் ரெடியாகி விடுவார்கள் என்று சொல்கிறார்கள்.

அதேநேரம், தமிழகம் முழுக்க விஜய் சுற்றுப்பயணம் செய்வதற்குத் திட்டமிடவில்லை.  பெரம்பூர் தொகுதியில் அதிக விஜய் ரசிகர்கள் இருப்பதால், அங்கு பிரசாரம் செய்வாராம். இதையடுத்து ஆதவ் போட்டியிடும் வில்லிவாக்கத்தில் பிரசாரம் செய்வாராம்.

மேலும் அருண்ராஜ், ராஜ்மோகன் போன்ற பெரும் தலைகள் களத்தில் நிற்கும் தொகுதிகளில் மட்டுமே விஜய் பிரசாரம் இருக்கும், மற்ற தொகுதிகளுக்கு எல்லாம் தனித்தனியே வீடியோ வெளியாகும் என்கிறார்கள்.

இது குறித்து பேசுவதற்கு மார்ச் 22 அன்று இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட நிர்வாகிகளை அழைத்து பேச இருக்கிறார். விஜய் 234 தொகுதிகளிலும் பிரசாரம் செய்தால் ஒட்டுமொத்தமாக ஸ்வீப் செய்வோம். அவர் குறைவான தொகுதிகளில் மட்டுமே பிரசாரம் செய்ய முடியும் என்பதாலே 150 தொகுதிகளில் வெற்றி என்கிறார்கள்.

விஜய் ரசிகர்கள் உலகமே தனிதான்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share via
Copy link