Share via:
திமுகவினர் கூட்டணி பேரம் முடிப்பதற்கு தடுமாறிக்கொண்டிருந்த நேரத்தில்
எடப்பாடி பழனிசாமி மளமளவென தொகுதிப் பங்கீட்டை முடித்துவிட்டார். அதே வேகத்தில் தேர்தல்
அறிக்கையும் வெளியிட்டுவிட்டார்.
297 அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ளன. அவற்றில் வீடு தோறும் குளிர்சாதனப்பெட்டி,
மருத்துவப்படிப்பு இட ஒதுக்கீடு 10 சதவீதமாக உயர்வு, ரேஷன் கார்டுக்கு எண்ணெய், பருப்பு
போன்றவை மக்களைக் கவர்ந்துள்ளன.
இந்த நிலையில் யாரும் எதிர்பார்க்காத வகையில் முதல் கட்ட வேட்பாளர்
பட்டியல் வெளியிட்டுவிட்டார். அதன்படி 23 பேர் நிற்கும் தொகுதி வெளியாகியுள்ளது.
- எடப்பாடி
தொகுதி : எடப்பாடி மு. பழனிசாமிகழகப் பொதுச் செயலாளர், சட்டமன்ற எதிர்க்கட்சித்
தலைவர் தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சர்
- வேப்பனஹள்ளி
தொகுதி : கே.பி. முனுசாமி, கழக துணைப் பொதுச் செயலாளர் முன்னாள் அமைச்சர்
- திண்டுக்கல்
தொகுதி : திண்டுக்கல் ஊ. சீனிவாசன், கழகப் பொருளாளர் திண்டுக்கல் மேற்கு மாவட்டக்
கழகச் செயலாளர் முன்னாள் அமைச்சர்.
- நத்தம்
தொகுதி : நத்தம் இரா. விசுவநாதன், கழக துணைப் பொதுச் செயலாளர் திண்டுக்கல் கிழக்கு
மாவட்டக் கழகச் செயலாளர் முன்னாள் அமைச்சர்
- தொண்டாமுத்தூர்
தொகுதி : எஸ்.பி.வேலுமணி, கழக தலைமை நிலையச் செயலாளர் கோவை புறநகர் தெற்கு மாவட்டக்
கழகச் செயலாளர் முன்னாள் அமைச்சர்
- குமாரபாளையம்
தொகுதி : பி. தங்கமணி, கழக அமைப்புச் செயலாளர் நாமக்கல் மாவட்டக் கழகச் செயலாளர்
முன்னாள் அமைச்சர்
- ராயபுரம்
தொகுதி : டி.ஜெயக்குமார், கழக அமைப்புச் செயலாளர் வட சென்னை தெற்கு (கிழக்கு)
மாவட்டக் கழகச் செயலாளர் முன்னாள் அமைச்சர்
- மைலம்
தொகுதி : சி.வி.சண்முகம், கழக அமைப்புச் செயலாளர் விழுப்புரம் மாவட்டக் கழகச்
செயலாளர் முன்னாள் அமைச்சர்
- மதுரை
மேற்கு தொகுதி : செல்லூர் ராஜூ, கழக அமைப்புச் செயலாளர் மதுரை மாநகர் மாவட்டக்
கழகச் செயலாளர் முன்னாள் அமைச்சர்
- பாலக்கோடு
தொகுதி : கே.பி.அன்பழகன், கழக அமைப்புச் செயலாளர் தருமபுரி மாவட்டக் கழகச் செயலாளர்
முன்னாள் அமைச்சர்
- நன்னிலம்
தொகுதி : சு. காமராஜ், கழக அமைப்புச் செயலாளர் திருவாரூர் மாவட்டக் கழகச் செயலாளர்
முன்னாள் அமைச்சர்
- வேதாரண்யம்
தொகுதி : ஓ.எஸ்.மணியன், கழக அமைப்புச் செயலாளர் நாகப்பட்டினம் மாவட்டக் கழகச்
செயலாளர் முன்னாள் அமைச்சர்
- விராலிமலை
தொகுதி : டாக்டர் சி. விஜயபாஸ்கர், கழக அமைப்புச் செயலாளர் புதுக்கோட்டை வடக்கு
மாவட்டக் கழகச் செயலாளர் முன்னாள் அமைச்சர்
- கோவில்பட்டி
தொகுதி : கடம்பூர் ராஜூ, கழக அமைப்புச் செயலாளர் தூத்துக்குடி வடக்கு மாவட்டக்
கழகச் செயலாளர் முன்னாள் அமைச்சர்
- திருமங்கலம்
தொகுதி : ஆர்.பி.உதயகுமார், கழக புரட்சித் தலைவி பேரவைச் செயலாளர் மதுரை புறநகர்
மேற்கு மாவட்டக் கழகச் செயலாளர் முன்னாள் அமைச்சர்
- சிவகாசி
தொகுதி : கே.டி.ராஜேந்திரபாலாஜி, கழக அமைப்புச் செயலாளர் விருதுநகர் மேற்கு மாவட்டக்
கழகச் செயலாளர் முன்னாள் அமைச்சர்
- மதுரவாயல்
தொகுதி : பா.பென்ஜமின், கழக அமைப்புச் செயலாளர் திருவள்ளூர் மத்திய மாவட்டக் கழகச்
செயலாளர் முன்னாள் அமைச்சர்
- கலசபாக்கம்
தொகுதி : அக்ரி எஸ்.எஸ். கிருஷ்ணமூர்த்தி, கழக விவசாயப் பிரிவுச் செயலாளர் திருவண்ணாமலை
தெற்கு மாவட்டக் கழகச் செயலாளர் முன்னாள் அமைச்சர்
- திருப்பரங்குன்றம்
தொகுதி : வி.வி.ராஜன் செல்லப்பா, கழக அமைப்புச் செயலாளர் மதுரை புறநகர் கிழக்கு
மாவட்டக் கழகச் செயலாளர்
- பவானி
தொகுதி : கே.சி.கருப்பணன், ஈரோடு புறநகர் கிழக்கு மாவட்டக் கழகச் செயலாளர் முன்னாள்
அமைச்சர்
- ஜோலார்பேட்டை
தொகுதி : கே.சி.வீரமணி, திருப்பத்தூர் மாவட்டக் கழகச் செயலாளர் முன்னாள் அமைச்சர்
- கரூர்
தொகுதி : எம்.ஆர்.விஜயபாஸ்கர், கரூர் மாவட்டக் கழகச் செயலாளர் முன்னாள் அமைச்சர்
- அரியலூர்
தொகுதி : தாமரை எஸ்.ராஜேந்திரன் அரியலூர் மாவட்டக் கழகச் செயலாளர் அரசு முன்னாள்
தலைமைக் கொறடா, ஆகியோர் போட்டியிடுகின்றனர்.
இந்த வேட்பாளர் பட்டியலின் படி 23 வேட்பாளர்களில் 16 பேர் சிட்டிங்
எம்எல்ஏ.க்கள், ஒருவர் எம்.பி. அது மட்டுமின்றி, மதுரை திருப்பரங்குன்றம் தொகுதியில்
பாஜக போட்டியிடும் என்று கூறப்பட்டு வந்த நிலையில் ராஜன் செல்லப்பா போட்டியிடுவார்
என்று அறிவிக்கப்பட்டுள்ளது. சி.வி. சண்முகம் எம்.பியாக இருக்கும் நிலையில், மீண்டும்
அவர் சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடுவார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
முதல் கட்டமாக வேட்பாளர் பட்டியல் அறிவிப்பு வெளியாகியிருப்பது
கட்சியினரை மிகவும் உற்சாகப்படுத்தியிருக்கிறது. அதோடு இன்று மயிலாப்பூரில் பிரசாரத்தைத்
தொடங்கி அதிமுகவே எப்போதும் முன்னணி என்பதைக் காட்டியிருக்கிறார் எடப்பாடி பழனிசாமி.
