Share via:
நேற்றைய தினம் திமுக ஒரே நேரத்தில் 164 வேட்பாளர்கள் பட்டியலை
வெளியிட்டது. எடப்பாடி பழனிசாமி இதுவரை 150 தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் பட்டியலை இரு
கட்டங்களாக வெளியிட்டிருந்தார்.
இன்று கன்னியாகுமரி பரப்புரைக்குச் செல்லும் நிலையில் காலையிலே
இறுதிகட்ட வேட்பாளர்கள் பட்டியலை இபிஎஸ் வெளியிட்டார். இறுதிக்கட்ட வேட்பாளர்கள் பட்டியலில்
17 தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் இருக்கிறார்கள்.
சென்னை திருவிக நகர் தொகுதியில் அதிமுக கூட்டணி சார்பாக மறைந்த
ஆம்ஸ்ட்ராங் அவர்களின் மனைவி பொற்கொடி ஆம்ஸ்ட்ராங் போட்டியிடுவது சென்னையை பரபரப்பாக்கியிருக்கிறது.
அதேபோல், கடந்த முறை ஸ்டாலினை கொளத்தூரில் எதிர்த்து நின்ற அதிமுக வேட்பாளர் ஆதி ராஜாராம்,
இம்முறை சேப்பாக்கத்தில் துணை முதல்வர் உதயநிதிக்கு எதிராக நிறுத்தப்பட்டுள்ளார்.
1. ஆயிரம் விளக்கு – பா.வளர்மதி
2. அண்ணாநகர் – கோகுல இந்திரா –
3. சேப்பாக்கம் – திருவல்லிக்கேணி- ஆதி ராஜாராம்
4. திட்டக்குடி (தனி) – முருகுமாறன்
5. துறைமுகம் – ராயபுரம் ஆர்.மனோ
6. விருகம்பாக்கம் – விருகை வி.என்.ரவி
7. தியாகராயநகர் – சத்தியநாராயணன்
8. வேளச்சேரி – எம்.கே.அசோக்
9. சோழிங்கநல்லூர் – கே.பி.கந்தன்
10. ஆர்.கே.நகர் – ஆர்.எஸ். ராஜேஷ்
11. வில்லிவாக்கம் – எஸ்.ஆர்.விஜயகுமார்
12. திருச்சுழி – ராஜவர்மன்
13. ஆலந்தூர் – எஸ்.சரவணன்
14. கொளத்தூர் – பி.சந்தான கிருஷ்ணன்
15. திரு.வி.க நகர் (தனி) – பொற்கொடி ஆம்ஸ்ட்ராங்
16. எழும்பூர் (தனி) – அபிஷேக் ரங்கசாமி
17.ஆலங்குடி (182) – தன.விமல்
ஆர்ம்ஸ்ட்ராங்க் படுகொலைக்கு நீதி கிடைக்க வேண்டும் என்று இபிஎஸ்
களம் இறக்கியிருப்பதாகச் சொல்கிறார்கள். அதேநேரம், ஸ்டாலினுக்குப் போட்டி கடுமையாக
இல்லை.