Share via:
கூட்டணிக்கு யாருமே இல்லாமல் இந்த தேர்தலில் தனித்து நிற்கிறார்
நடிகர் விஜய். கடந்த தேர்தலில் கமல்ஹாசன் போன்று இந்த தேர்தலில் விஜய் வந்திருக்கிறார்.
இன்று ஒருவழியாக அவர் பிரசாரத்தில் இறங்குகிறார்.
இன்று சென்னை பெரம்பூர் சட்டமன்றத் தொகுதியில், மதியம் 2 மணி முதல்
4 மணி வரை தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட தேர்தல் ஆணையத்திடம் விஜய் அனுமதி வாங்கியிருக்கிறார்.
இதையடுத்து மாலை 5 மணி முதல் 6 மணி வரை சென்னை கொளத்தூர் சட்டமன்றத் தொகுதியிலும்,
அதன் பிறகு, மாலை 6 மணி முதல் 7 மணி வரை, வில்லிவாக்கம் சட்டமன்றத் தொகுதியிலும் விஜய்
பேச இருப்பதாக சொல்லப்படுகிறது.
இப்படித்தான் ஒரே நாளில் ஐந்து தொகுதிகளுக்கு பிரசாரம் செய்வார்
என்று அறிவிப்பு வெளியானது. பின்னர் அது மாற்றப்பட்டது. அதேபோல் இன்றைய பிரசாரமும்
முழுமையாக நடைபெற வாய்ப்பு இல்லை என்றே சொல்லப்படுகிறது.
அதேநேரம், விஜய் வேட்பாளர் பட்டியலில் ரசிகர்களுக்கும் கட்சியினருக்கும்
வாய்ப்பு கிடைக்காமல் கட்சி மாறிவந்தவர்களுக்கு உடனுக்குடன் சீட் வழங்கியிருப்பது சர்ச்சையாகியுள்ளது.
அதேநேரம், தனித்துப் போட்டி என்று தெரிந்தாலும் கடைசியாக வேட்பாளர்
அறிவிப்பு செய்யப்பட்டதற்குப் பின்னே ஒரு காரணம் இருக்கிறது என்று நாம் தமிழர்கள் கிண்டல்
செய்கிறார்கள்.
இது குறித்து நாம் தமிழர் கட்சியினர், ‘’திமுக, அதிமுக எனும் இரு
கட்சிகளும் வேட்பாளர்களை அறிவிக்கக் காலதாமதம் செய்ததற்குக் காரணம், கூட்டணிக் கட்சிகளுடனான
தொகுதிப் பங்கீடு சிக்கல். தொகுதிகளின் எண்ணிக்கை, எந்தந்த தொகுதிகள் எனும் கணக்கீடு
என்பதெல்லாம் இழுத்துக் கொண்டு போகவேதான் வேட்பாளர்களை அறிவிக்க இரு கட்சிகளுக்கும்
இவ்வளவு நாள்கள் பிடித்தது. அதேசமயம், தனித்துப் போட்டியிடும் நிலைக்குத் தள்ளப்பட்ட
தவெக எதற்கு காலதாமதமாக வேட்பாளர்களை அறிவித்தது?
அங்குதான் இருக்கிறது சூட்சமம். வேட்பாளர் தேர்வைத் தாமதம் செய்தால்,
திமுக, அதிமுக மற்றும் பிற கட்சிகளில் வாய்ப்புக் கிடைக்காதவர்களை நமது கட்சியில் வேட்பாளர்
ஆக்கிக் கொள்ளலாம் எனும் அற்ப ஆசை. அந்த ஆசை ஓரளவு நிறைவேறியிருக்கிறது எனலாம். உதாரணம்,
4 நாட்களுக்கு முன்பு காங்கிரசிலிருந்து தவெகவுக்குத் தாவிய செல்வம் சேப்பாக்கம் திருவல்லிக்கேணியில்
தவெகவின் சார்பாகப் போட்டியிடுகிறார். பண்ருட்டி ராமச்சந்திரனின் எம்ஜிஆர் அண்ணா திமுகவில்
இருந்து அண்மையில் விலகிய ரஞ்சித் குமார் காஞ்சிபுரம் வேட்பாளராக ஆக்கப்பட்டிருக்கிறார்.
திமுகவில் போட்டியிட விருப்ப மனு அளித்து, ஸ்டாலின் நடத்திய நேர்காணலிலும்
பங்கேற்ற நிலையில், தேர்தலில் வாய்ப்பு மறுக்கப்பட்ட ஆர்.எஸ். முருகன் இப்போது தவெகவின்
நெல்லை வேட்பாளர். திருப்பத்தூர் தொகுதி அமமுகவுக்கு ஒதுக்கப்பட்டதால் அதிருப்தியடைந்த
அதிமுகவின் திருப்பதி, தற்போது அதே தொகுதியில் தவெகவின் வேட்பாளர். அதிமுகவில் சீட்
கிடைக்காத தூசி மோகனுக்கு உடனே சீட்.
கிட்டத்தட்ட 38 பேர் கட்சி மாறி வந்தவர்கள் என்று சொல்லப்படுகிறது.
இதுக்குத்தான் ஆசைப்பட்டாரா விஜய்..?
