Share via:
இன்று முதல் நபராக அஜித் ஓட்டு போய்விட்டு சென்றுவிட்டார். ஓட்டு
போட வந்ததில் இருந்து வீட்டுக்குத் திரும்பியது வரை அவர் யாரிடமும் எதுவும் பேசவில்லை.
இந்த நிலையில் திடீரென, ‘மாற்றம் தேவையில்லை’ என்று அஜித் சொன்னதாக ஒரு செய்தி பரப்பப்பட்டது.
இதை முதல்வர் ஸ்டாலிடம் கேட்டார்கள். அஜித் பேசியது உண்மையா, பொய்யா
என்றெல்லாம் கேட்டுக்கொள்ளாத ஸ்டாலின், ‘அஜித் சொன்னது நல்ல கருத்து’ என்று முதல்வர்
ஸ்டாலின் நன்றி தெரிவித்துள்ளார்
இந்த விவகாரம் படு வைரலான நிலையில் அஜித்தின் மேலாளர் சுரேஷ் சந்திரா
அந்தத் தகவலுக்கு விளக்கமளித்திருக்கிறார். அவர், “வதந்தியைப் பரப்ப வேண்டாம்.
‘மாற்றம் தேவை’ என்றோ அல்லது ‘தேவையில்லை’ என்றோ அஜித்குமார் எந்தத் தகவலையும் செய்தியாளர்களிடம்
தெரிவிக்கவில்லை” என்று விளக்கமளித்திருக்கிறார்.
அதேநேரம், சிம்புவிடம் இதுகுறித்து கேட்கப்பட்டது. அதற்கு அவர்,
‘’எதுக்கு மாற்றம் நல்லா தானே போய்ட்டு இருக்கு’’ என்று வெளிப்படையாகத் தெரிவித்திருக்கிறார்.
உண்மையா, பொய்யா என்றெல்லாம் தெரியாமல் பேசுவதால்தான், ஸ்டாலினை
பொம்மை முதல்வர் என்கிறார்கள்.
