Share via:
விஜய்யின் ஜனநாயகன் ரிலீஸ் ஆகிவிட்டது. ஒரு அமைச்சர் படத்தைப்
பார்த்து கண்ணீர் சிந்துகிறார். இரண்டு அமைச்சர்கள் ஒன்றாக சேர்ந்து போஸ் கொடுத்து
மகிழ்கிறார்கள். ஒரு அமைச்சர் விஜய் ஃப்ளக்ஸைத் தடவிக்கொடுத்து ரசிக்கிறார்.
இது குறித்து பேசுபவர்கள், ‘’’’இன்று தமிழ் நாடு முழுக்க தியேட்டர்களில்
ஜனநாயகன் படம் பிளாக்ல டிக்கெட்கள் விற்பனை ஜோராக நடக்கிறது. இது, ஊழல் சமுதாயத்தில்
புரையோடிப் போயுள்ளது என்பதைத்தான் இது காட்டுகிறது. சும்மா மைக்கை புடிச்சுகிட்டு
லஞ்சம் கேட்டால் கொடுக்காதீங்க இல்லைன்னா என் கிட்ட வாங்கன்னு பேசிட்டா லஞ்சம் ஒழியப்போவதில்லை.
யாரும் ஜனநாயகன் படத்தை பிளாக்ல பார்க்காதீங்கன்னு சொல்ல முடியவில்லை, இவர்தான் ஊழலை
ஒழிக்கப்போகிறாரா?’’ என்று கேள்வி எழுப்புகிறார்கள்.
ஜனநாயகன் டைட்டில் கார்டில் “ஜோசப் விஜய்” என இருப்பது
சர்ச்சையாகியுள்ளது. தான் படம் நடிக்க தொடங்கிய
காலம் முதல் அத்தனை படங்களிலும் தன் பெயரை விஜய் என்று மட்டுமே போட்டுக்கொண்டவர் இப்போது
ஜோசப் விஜய் என போட்டுகொள்ளக் காரணம் என்ன? அடையாளங்களை நேரத்துக்கு தகுந்த மாதிரி
மாற்றிக்கொள்பவர் நல்ல அரசியல் தருவாரரா?
இந்த விவகாரத்தில் நா தமிழரின் இடும்பாவனம் கார்த்தி, ‘’இவ்வளவு
நாட்களாக, திரையரங்கத்தின் டிக்கெட் கவுண்டரில் விற்ற டிக்கெட்டுகளை வாங்கிக் கொண்டு
போய், பிளாக்கில் அதிக விலைக்கு விற்றார்கள். இப்போது டிக்கெட் கவுண்டரிலே 700,800
ரூபாய்க்கு என விலையை ஏற்றி, முறைகேடாக விற்கிறார்கள். இணையம் வாயிலாக டிக்கெட் எடுத்தால்,
அங்கும் கூடுதலாக 600, 700 ரூபாய் செலுத்தச் சொல்லி, மெசேஜ் வருகிறது. திருட்டுத்தனமாக
டிக்கெட் விலையை ஏற்றி விற்றவர்கள், இப்போது வெளிப்படையாக அதனைச் செய்யத் தொடங்கியிருக்கிறார்கள்.
தங்களின் ஆட்சியென ஆட்டம் போடத் தொடங்கியிருக்கிறது கேடுகெட்ட
தவெக அரசு. திரையரங்குகளில் டிக்கெட் மற்றும் இதர கட்டணங்களை நிர்ணயிப்பது மற்றும்
ஒழுங்குப்படுத்துவது எல்லாம் உள்துறை அமைச்சகத்தின் கீழ்தான் வருகிறது. உள்துறை அமைச்சகம்
முதல்வர் விஜய்யின் நேரடிக்கட்டுப்பாட்டில் இருக்கிறது. தனது நேரடிக்கட்டுப்பாட்டில்
இருக்கும் துறையில் தனது திரைப்பட வெளியீட்டின்போது வெளிப்படையாகச் செய்யப்படும் முறைகேட்டைத்
தடுக்கத் துப்புகெட்ட முதல்வர் விஜய்தான் ஊழலை ஒழித்துக் கிழிக்கப் போகிறாராம்..’’
என்று கிண்டல் செய்கிறார்.