News

செந்தில் பாலாஜிக்கு லுக் அவுட் நோட்டீஸ். 10ம் தேதி வரை தாக்குப் பிடிப்பாரா..?

Follow Us

முதல்வர் உள்ளிட்ட அத்தனை அமைச்சர்களும் ஜனநாயகன் கொண்டாட்டத்தில் இருக்கும்போது, தூத்துக்குடியில் விசாரணை அழைத்துக்குச் செல்லப்பட்ட அருணாச்சலம் என்ற இளைஞரை காவல்துறை அடித்தே கொன்றுவிட்டதாக உறவினர்கள் குற்றச்சாட்டு எழுப்பியிருக்கிறார்கள்.

தூத்துக்குடி 3வது மைல் கல் டாஸ்மாக் கடையில் பணியாற்றிவரும் அருணாச்சலத்தை கடந்த 7ம் தேதி போலீஸார் விசாரணைக்கு அழைத்துச்சென்றுள்ளனர். விசாரணைக்குப் பிறகு அவர் தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் காயங்களுடன் அனுமதிக்கப்பட்டார். கடந்த 7 நாட்களாக சிகிச்சை பெற்றுவந்த அருணாச்சலம் இன்று காலை உயிர் இழந்திருக்கிறார்.

இதையடுத்து தூத்துக்குடி தென்பாகம் போலீசார் அருணாச்சலத்தை அடித்துக் கொன்றுவிட்டதாக போலீஸார் மீது உறவினர்கள்  புகார் கூறி போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அருணாச்சலத்தை அடித்துக்கொன்ற போலீஸாரை கைது செய்யவேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளனர்.

காவல் நிலையத்தில் வைத்து போலீசார் 3 பேர் சேர்ந்து தன்னை அடித்ததாக உயிரிழந்த அருணாச்சலம் பரபரப்பு மரண வாக்குமூலம் கொடுத்திருக்கிறார். ஒவ்வொரு குடிமகனின் உயிருக்கும் பாதுகாப்பு அளிப்பதுதான் முதல்வரின் கடமை. ஆனால், எல்லோரும் ஜனநாயகன் பார்த்து ரீல் ஆட்சி நடத்துகிறார்கள்.

அஜித் மரணத்துக்கு ஸ்டாலின் செல்லவில்லை என்று குரல் கொடுத்த விஜய், இப்போது அருணாச்சலம் வீட்டுக்குப் போவாரா..?

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share via
Copy link