Share via:
விஜய் ஆட்சிக்கு வந்ததும் திமுக கொண்டுவந்த திட்டங்களின் பேரை
மாற்றிவருகிறார். நான் முதல்வன் திட்டம் திறன் தமிழ்நாடு என்று பேர் வைக்கப்பட்டது.
மகளிர் விடியல் பயணத்தை மகளிர் பயணமாக மாற்றினார்.
தாயுமானவர் திட்டத்தை
வீடு தேடி பொருட்கள் வழங்கும் திட்டம் என்று பேர் மாற்றினார்.
அந்த வரிசையில் முதல்வரின் காலை உணவுத் திட்டத்தை இப்போது பெருந்தலைவர் காமராஜர் காலை உணவுத் திட்டம் என்று பேர் சூட்டியிருக்கிறார்.
இது குறித்து பேசும் சமூக ஆர்வலர்கள், ‘’முதல்வரின் காலை உணவுத் திட்டத்திற்கு பெருந்தலைவர் காமராஜர்
பெயர் சூட்டப்பட்டிருப்பது புதிய சிந்தனை அல்லது புதிய சாதனை அல்ல. புதிதாக ஒரு மக்கள்
நலத் திட்டத்தை உருவாக்கி அதற்கு கர்ம வீரர் காமராஜர் பெயரை வைக்கும் திறனும், தொலைநோக்கும்
இல்லாததால்தான் ஏற்கனவே செயல்பட்டு வரும் திட்டத்தின் பெயரை மாற்றும் அரசியலில் முதலமைச்சர்
விஜய் ஈடுபட்டுள்ளார்.
திரையுலகில் ரீமேக் படங்களில் நடித்தவர்
விஜய். இன்று அரசியலிலும் அதே ரீமேக் அரசியலையே செய்து வருகிறார். திமுக கொண்டு வந்த
திட்டங்களை புதிய பெயரில் மறுபேக்கேஜ் செய்து மக்களிடம் காட்டுவது சாதனை அல்ல; அது
புதிய சிந்தனை இல்லாத அரசியலின் வெளிப்பாடுதான். காமராஜரின் பெயரை பயன்படுத்துவது எளிது.
ஆனால் காமராஜர் உருவாக்கிய கல்விப் புரட்சிக்கு
இணையான ஒரு புதிய வரலாற்றை உருவாக்குவதுதான் உண்மையான தலைமை. பெயர்களை மாற்றுவதால்
பெருமை கிடைக்காது; மக்களின் வாழ்க்கையை மாற்றும் புதிய திட்டங்களால்தான் வரலாறு படைக்க
முடியும். உங்கள் வன்ம அரசியலின் முகத்திரை இன்று கிழிந்து தொங்குகிறது’’ என்று விமர்சனம்
செய்கிறார்கள்.
அதேநேரம், திமுகவின் திட்டங்களின் பெயரை
மாற்றும் விஜய் அம்மா உணவகத்துக்கும் பேரை மாற்றுவாரா?
