News

பிரேமலதாவுக்கு ஒண்ணு. திமுகவுடன் காங்கிரஸ் பஞ்சாயத்து ஓவர்.

Follow Us

தி.மு.க வின் மாணவர் அணிச் செயலாளராகச் செயல்பட்டு வந்த ராஜீவ் காந்தியை திடீரென அந்தப் பதவியிலிருந்து நீக்கிவிட்டு,அவருக்கு கொள்கை பரப்பு இணைச் செயலாளர் என்ற பதவி கொடுக்கப்பட்டுள்ளது. இதற்கு அவர் மீது 35 பெண்கள் கூறிய பாலியல் குற்றச்சாட்டே காரணம் என்று கூறப்படுகிறது.

நாம் தமிழர் கட்சியிலிருந்து தி.மு.க முகாமிற்கு வந்தார் ராஜீவ் காந்தி. தொடர்ந்து தி.மு.க-வுக்கு ஆதரவாக மேடைகளில் முழங்கிவந்தார். துணை முதல்வர் உதயநிதியின் ஆதரவாளராகவும் அமைச்சர் அன்பில் மகேஸ்க்கு நெருக்கமானவராக மாறினார். இதனால் கடந்த ஆண்டு தி.மு.க-வின் மாணவர் அணி என்கிற முக்கிய அணியின் மாநிலச் செயலாளராக ராஜீவ் காந்திக்கு பொறுப்பு வழங்கப்பட்டது

தி.மு.க தலைமை. பொறுப்புக்கு வந்த பிறகு மாணவர் அணியின் மூலம் பல்வேறு நிகழ்ச்சிகளை தமிழகம் முழுவதும் நடத்திவந்தார். இந்நிலையில் இவர் குறித்து தொடர்ந்து தி.மு.க தலைமைக்குப் புகார் சென்றுள்ளது. கிட்டத்தட்ட 35 பெண்கள் ராஜீவ் காந்தி மீது பாலியல் குற்றச்சாட்டு கூறியதாக சொல்லப்படுகிறது. பெண் நிர்வாகிகள் சிலருக்கு இரவு நேரத்தில் இன்ஸ்டாகிராம், ஃபேஸ்புக் வழியாக தேவையற்ற முறையில் மெசேஜ் செய்தது ஆதாரபூர்வ குற்றச்சாட்டாக கூறப்பட்டுள்ளது.

அதனாலே மாணவர் அணிச் செயலாளர் பதவியிலிருந்து ராஜீவ் காந்தி நீக்கப்பட்டு, கொள்கை பரப்பு இணைச் செயலாளர் என்கிற பதவிக்கு மாற்றப்பட்டுள்ளார். பெண் விவகாரம் தவிர்த்து அமைச்சர் செந்தில் பாலாஜியுடன் மோதியதும் ஒரு முக்கிய காரணம் என்று சொல்லப்படுகிறது.

இவர் மனைவியின் ஊர் கோயம்புத்துார் என்பதால், அங்கு ஒரு தொகுதியில் போட்டியிடவும் ராஜீவ் காந்தி திட்டமிட்டார். இதற்கு கோவை மண்டலத்திற்கு பொறுப்பாளராக இருக்கும் செந்தில் பாலாஜி ஒப்புக்கொள்ளவில்லை என்றதும் தலைமையிடம் தொகுதி வாங்கிவிடுவேன் என்று செந்தில் பாலாஜியை எச்சரிக்கை செய்திருக்கிறார்.

அதோடு பல டெண்டர் விவகாரங்களில் தலையிட்டு சில அமைச்சர்களுடன் மோதியிருக்கிறார்.

ஒட்டுமொத்த விவகாரமும் சேர்ந்து ராஜீவ்காந்தியை கவிழ்த்துவிட்டதாக சொல்லப்படுகிறது. அதேநேரம், தேர்தல் நேரத்தில் பதவி பறிப்பு சர்ச்சையாகிவிடக் கூடாது என்பதாலே டம்மி பொறுப்பு கொடுக்கப்பட்டுள்ளதாம். அதேநேரம், கட்சி விவகாரங்களில் தலையிடக்கூடாது என்று எச்சரிக்கை செய்ததாகவும் கூறப்படுகிறது.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share via
Copy link