Share via:
தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு ரொம்பவே கெட்டுப்போய் கிடக்கிறது
என்பதற்கு சான்றாகப் பல்வேறு நிகழ்வுகள் நடைபெற்று வருகின்றன. இப்போது வேடநத்தம் மாணவி
கொலையில் குற்றவாளியை கண்டுபிடிக்க முடியாத நிலையை, அதிமுக அட்டகாசமாகப் பயன்படுத்திக்கொள்கிறது.
இதையே தேர்தல் யுக்தியாக பயன்படுத்தத் தொடங்கியிருக்கிறார். இதையடுத்து
ளாத்திக்குளம் வேடநத்தம் பள்ளி மாணவி பாலியல் வன்கொடுமை, கொலை வழக்கில், பாதிக்கபட்ட
மாணவிக்கு உரிய நீதி வேண்டி,தூத்துக்குடி வடக்கு மாவட்டக் கழகத்தின் சார்பில், பிரமாண்ட
ஊர்வலம் நடத்தப்பட்டது. முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜூ தலையில் நடைபெற்ற ஊர்வலத்தில்
ஏராளமானோர் கலந்து கொண்டனர். அமைதியான முறையில்
ஊர்வலம் சென்று,மெழுகுவர்த்தி ஏந்தி கண்ணீர் அஞ்சலி செலுத்தப்பட்டது.
இதேபோல், இராமநாதபுரம் மாவட்டக் கழகத்தின் சார்பில்,பாதிக்கப்பட்ட
+2 மாணவிக்கு நீதி கேட்டு மெழுகுவர்த்தி ஏந்தி கண்ணீர் அஞ்சலி செலுத்தப்பட்டது. மதுரை
புறநகர் கிழக்கு மாவட்டக் கழகத்தின் சார்பில்,நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் ஏராளமானோர்
கலந்து கொண்டனர். பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட மாணவிக்கு கேட்டு
மெழுகுவர்த்தி ஏந்தி கண்ணீர் அஞ்சலி செலுத்தப்பட்டது.
திருச்சி புறநகர் தெற்கு மாவட்டக் கழகத்தின் சார்பிலும் கண்ணீர்
அஞ்சலி செலுத்தப்பட்டது. திருவண்ணாமலை மத்திய மாவட்டக் கழகத்தின் சார்பில்,மாவட்டக்
கழகச் செயலாளர் தலைமையில் நடைபெற்ற மவுன அஞ்சலி பேரணியில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
மாவட்டக் கழகச் செயலாளர் ஜெயசுதா தலைமையில் மெழுகுவர்த்தி ஏந்தி கண்ணீர் அஞ்சலி செலுத்தப்பட்டது.
விருதுநகர் கிழக்கு மாவட்டக் கழகத்தின்
சார்பில், பாதிக்கபட்ட மாணவிக்கு உரிய நீதி வேண்டி, மெழுகுவர்த்தி ஏந்தி கண்ணீர் அஞ்சலி
செலுத்தப்பட்டது. வேலூர் மாநகர் மாவட்டக் கழகத்தின் மாவட்ட செயலாளர் தலைமையில் மெழுகுவர்த்தி
ஏந்தி கண்ணீர் அஞ்சலி செலுத்தப்பட்டது. சிவகங்கை மாவட்டக் கழகத்தின் சார்பில், வேடநத்தம்
பள்ளி மாணவிக்கு நீதி கேட்டு மெழுகுவர்த்தி ஏந்தி கண்ணீர் அஞ்சலி செலுத்தப்பட்டது.
இன்றும் தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில்
நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் ஏராளமானோர் கலந்து கொள்வதாக சொல்லப்படுகிறது. இதை தடுக்க்
திமுக என்ன செய்யபோகிறது என்று பார்க்கலாம்.
