News

பிரேமலதாவுக்கு ஒண்ணு. திமுகவுடன் காங்கிரஸ் பஞ்சாயத்து ஓவர்.

Follow Us

காங்கிரஸ் கட்சியை கண்டிப்பாகக் கூட்டணிக்குக் கூட்டிவருவேன் என்று விஜய்க்கு பிராமிஸ் செய்திருந்த ஆதவ் அர்ஜூனாவை கட்சியில் இருந்து வெளியேற்ற வேண்டும் என்று ஆனந்த் அடம் பிடிப்பதாக செய்திகள் வெளியாகின்றன. ஆதவ் அர்ஜூனா திமுகவின் ஸ்லீப்பர் செல் என்று குற்றம் சாட்டியுள்ளார் ஆனந்த்.

இதுகுறித்து பேசும் விஜய் கட்சியின் மூத்த நிர்வாகி, ‘’கடந்த 2021 சட்டசபை தேர்தலில் திமுக வெற்றி பெறுவதற்காக பிரசாந்த் கிஷோர் உடன் இணைந்து வேலை செய்தவர் தான் ஆதவ் அர்ஜுன், இதனை தொடர்ந்து அவர் மனதில் அரசியல் ஆசை துளிர் விட, அடுத்து 2024 நாடளுமன்ற தேர்தலில் எம்பியாகி விட வேண்டும் என்கிற கனவில் விடுதலை சிறுத்தை கட்சியில் இணைந்தார். இதன் பின்பு திமுக கூட்டணியில் இருந்து கொண்டு ஆட்சியில் பங்கு அதிகாரத்தில் பங்கு என கூட்டணிக்குள் குழப்பத்தை ஏற்படுத்தினார் ஆதவ். திமுக கொடுத்த நெருக்கடி விசிகாவில் இருந்து ஆதவ் அர்ஜுன் வெளியேற்றப்பட்டார்,

இதன் பின்பு தமிழக வெற்றி கழகத்தில் இணைந்தார் ஆதவ் அர்ஜுன், ஆனால் ஆதவ் அர்ஜுன் நடிகர் விஜய்யை தவறாக வழிநடத்தி ஒரு ஸ்லீப்பர் செல் போன்று விஜய்யை காலி செய்து வருகிறார். குறிப்பாக கரூர் விவாகரத்தில் போது, விஜய் உடன் கூட்டணிக்கு பாஜக நேரடியாக அழைப்பு விடுத்தது. ஆனால் விஜய்யை பாஜக பக்கம் செல்ல விடாமல் பார்த்து கொண்டனர், இதற்கு முக்கிய காரணம் காங்கிரஸ் கட்சியை கூட்டணிக்குள் கொண்டு வருகிறோம், அவசரப்படவேண்டாம், நீங்கள் தான் முதல்வர் வேட்பாளர் என விஜய்யை உசுப்பேத்தி விட்டு பாஜக உடன் கைகோர்ப்பதை தவிர்த்து இருக்கிறார்.

ஆனால் தற்பொழுது விஜய்க்கு அல்வா கொடுத்துவிட்டு திமுகவுடன் கூட்டணியை உறுதி செய்து இருக்கிறது காங்கிரஸ், அந்த வகையில் திமுகவிடம் கூடுதலாக 3 தொகுதிகளை பெறுவதற்கே விஜய்யை காங்கிரஸ் பயன்படுத்தி கொண்டது என்பது தற்பொழுது அமபலமாகி இருக்கிறது. குறிப்பாக விஜயின் அரசியல் வருகை அவருடைய ரசிகர்கள் மத்தியில் மிக பெரிய எழுச்சியை ஏற்படுத்தி இருந்தாலும், விஜய்யை தவிர்த்து அவருடைய தமிழக வெற்றி கழகத்தில் இரண்டாம் கட்ட தலைவர்கள் இல்லாமல் தத்தளித்து வருகிறது.

குறிப்பாக நடிகர் விஜய் கட்சி தொடங்கியதும், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் முன்னாள் அமைச்சர்கள் என மாற்று கட்சியில் இருந்து அரசியல் அனுபவம் வாய்ந்த நபர்கள் இணைவார்கள் என்கிற எதிர்பார்ப்பு இருந்தது ஆனால் செங்கோட்டையன் தவிர்த்து சொல்லும்படியாக யாரும் வரவில்லை, செங்கோட்டையனும் இப்போது விரக்தியில் இருப்பதாக கூறப்படுகிறது.

ஆதவ் அர்ஜுனா திட்டமே, அதிமுக – பாஜக கூட்டணியில் விஜய் இணைந்து விட கூடாது, கடைசி வரை காங்கிரஸ் போன்ற கட்சிகள் கூட்டணிக்கு வருகிறது என ஏமாற்றி காலம் கடத்தி , கடைசி நேரத்தில் திமுகவுக்கு எதிரான வாக்குகளை விஜய் மற்றும் அதிமுக இரண்டும் பிரித்து விட்டால், அது திமுகவுக்கு சாதகமாக அமைந்துவிடும் இது தான் ஆதவ் அர்ஜுனா திமுகவுக்கு ஆதரவாக ஸ்லீப்பர் செல் போன்று விஜய்யை காலி செய்து வருகிறார் என்பதை விஜய்யிடம் ஆனந்த் தெளிவாக விளக்கியிருக்கிறார்.

தேர்தல் நெருக்கத்தில் கட்சியை விட்டு அனுப்புவதா வேண்டாமா என்ற குழப்பத்தில் இருக்கிறாராம் விஜய்.

இந்த நிலையில் இன்று மகளிர் தின விழாவில் மகளிர் உரிமைத் தொகை 3 ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என்ற அறிவிப்பு வெளியாக வாய்ப்பு உண்டு என்கிறார்கள். பார்க்கலாம்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share via
Copy link