Share via:
நடிகர் விஜய் வருகையால் நாம் தமிழர் கட்சிக்கு கடுமையான பாதிப்பு
இருக்கும் என்று கூறப்பட்டு வந்தது. அதனாலே இரண்டு கட்சியினருக்கும் இடையில் அவ்வப்போது
மோதல்கள் நடந்துள்ளன. இந்த நிலையில் த்ரிஷா விவகாரத்தில் விஜய் ரசிகர்களே கொதிப்பதைக்
கண்டு நாம் தமிழர்கள் குஷியாகியுள்ளனர். வரும் தேர்தலில் எத்தனை சீட் கிடைக்கும் என்று
சர்வே எடுத்துப் பார்த்துள்ளனர். அதில் அதிர்ச்சியான முடிவுகளே வந்திருக்கிறது.
இது குறித்து பேசும் நாம் தமிழர் கட்சியினர், ‘’இந்த முறையும்
தனித்துப் போட்டியிடுகிறோம். கடந்த 2016 முதல் படிப்படியாக வாக்கு வங்கியை உயர்த்தினாலும்,
நாம் தமிழர் கட்சியால் இதுவரை ஒரு இடத்திலும் வெற்றிபெற முடியவில்லை.
குறைந்தபட்சம் சீமான் நிற்கும் தொகுதியில் கூட இதுவரை வெற்றி வசமாகவில்லை
என்பதுதான் கள நிலவரம். இந்த முறை விஜய்யும் களத்துக்கு வந்துள்ளதால், நாம் தமிழர்
கட்சி நெருக்கடியில் இருப்பது கண்கூடு.
விஜயகாந்துக்குப் பின்னர் தமிழகத்தில் வலுவான மூன்றாவது பெரிய
ஆளுமை யாரும் இல்லாத சூழல் இருந்தது. அந்த இடத்தை சீமான் நிரப்பி வந்தார். எனவேதான்,
திமுக, அதிமுகவை விரும்பாத வாக்காளர்களின் முக்கிய தேர்வாக நாம் தமிழர் கட்சி இருந்தது.
ஆனால், இம்முறை மாற்றத்தை விரும்பும் வாக்காளர்களுக்கு விஜய் என்னும் இன்னொரு தேர்வும்
உள்ளது. எனவே, இம்முறை இவர்களின் ஆதரவை இருவரில் யார் கூடுதலாக பெறுவார் என்பதே எதிர்பார்ப்பு.
சரிபாதி தொகுதிகளில் பெண்களுக்கு வாய்ப்பு, எளிய மக்களுக்கு வாய்ப்பு,
பிராமணர்கள் முதல் பிறமொழியினர் வரை அனைத்து சமூகங்களுக்கும் வாய்ப்பு, சூழலியல் சிக்கல்களை
முன்வைத்து பிரச்சாரம், கொள்கைகளை முன்வைத்த அரசியல் என சமீபத்தில் சீமான் நடத்திய
‘மாற்றத்தை விரும்பும் மக்களின் மாநாடு’ பெரும் பேசுபொருளானது. எவ்வித எதிர்பார்ப்பும்
அற்று, கைக்காசை போட்டு இந்த மாநாட்டுக்கு கூடிய கூட்டம் லட்சத்தை தாண்டியது மற்ற கட்சிகளின்
கவனத்தை ஈர்த்தது.
கூட்டம் கூடுகிறது, கொள்கை இருக்கிறது, நட்சத்திர பேச்சாளர்கள்
சொல்மழை பொழிகின்றனர், சீமானின் எழுச்சிமிகு பேச்சு இருக்கிறது என்பதெல்லாம் நாதகவின்
பலம். ஆனால், இம்முறை நிச்சயம் சில தொகுதிகளிலாவது வெற்றிபெற வேண்டும் என அக்கட்சியின்
தொண்டர்கள் ஆழமாக நம்புகின்றனர். அதற்கேற்ப வியூகம் சீமானிடம் உள்ளதா?
சீமான் இம்முறை தன் சொந்த தொகுதியான காரைக்குடியில் போட்டியிடுகிறார்.
இந்த தொகுதியில் திமுக, அதிமுக நேரடியாக களமிறங்காது என்பது பிளஸ். பாஜக, காங்கிரஸ்,
தவெக என மும்முனைப் போட்டியை சீமான் எதிர்கொள்ள வேண்டும். அதனையும் தாண்டி சீமான் வெற்றிபெற
சில வாய்ப்புகள் கண்முன்னே தெரிகிறது. முதல்முறையாக சீமானை சட்டப்பேரவைக்கு அனுப்பலாமா
என்பதை காரைக்குடி மக்கள்தான் முடிவு செய்ய வேண்டும்.
காரைக்குடியைப் போல தென் தமிழகத்தில் தேசிய கட்சிகளின் ஆதிக்கம்
நிறைந்த சில தொகுதிகளில் நாதகவின் பலம் அதிகமாக உள்ளது. அங்கே தவெகவும் வாக்குகளைப்
பிரிப்பதால் தங்களால் சில தொகுதிகளை வெல்ல முடியும் என்று சீமான் கணக்குப் போடுகிறார்.
அதேபோல, மற்ற கட்சிகளையெல்லாம் தாண்டி நாதகவினர் விஜய்யை ரவுண்டு
கட்டி விமர்சித்து வருகின்றனர். எனவே விஜய்யின் தாக்கத்தை சமாளித்து, குறைந்த பட்சம்
இம்முறை 8.2 சதவீத வாக்குகளையாவது நாதக தக்கவைக்க வேண்டும். அதனையும் மனதில் வைத்தே
சீமான் தேர்தல் வியூகங்களை வகுத்து வருகிறார்.
இப்போது த்ரிஷாவை விஜய் கூட்டி வந்ததை அடுத்து அவருக்கு செல்வாக்கு
மளமளவென குறைந்துவருவது கண் கூடாகத் தெரிகிறது. த்ரிஷாவுக்கு முன்பு எடுத்துப் பார்த்த
ஒரு சர்வேயில், அத்தனை தொகுதியிலும் தோல்வியே கிடைக்கும் என்று தெரியவந்துள்ளது. குறிப்பாக
காரைக்குடியிலும் வெல்வதற்கு வாய்ப்பு இல்லை என்கிறார்கள்.
த்ரிஷா புண்ணியத்தில் ஒரு தொகுதியிலாவது வெல்லட்டும் விவசாயி.
