Share via:
திமுக அரசை எதிர்த்து வலுவான கூட்டணி உருவாக வேண்டும் என்றால்
விஜய் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இணைய வேண்டும் என்று இப்போது பாஜக சார்பில் பகிரங்க
அழைப்பு விடப்பட்டு வருகின்றன.
திமுகவை ஆட்சிக்கு வரவிடாமல் தடுப்பது தான் தனது லட்சியம் என்று
மேடைக்கு மேடை விஜய் பேசி வருகிறது. கூறி வருவது உண்மையென்றால் அவர் அதிமுக – பாஜக
கூட்டணியில் இணைய வேண்டும் என்று நயினார் நாகேந்திரன் தொடங்கி பல்வேறு தலைவர்களும்
நேரடியாக அழைப்புவிடத் தொடங்கிவிட்டனர்.
ஏற்கெனவே தமிழிசை செளந்தரராஜன் நேரடியாக அழைப்பு விடுத்தார். அதேநேரம்,
விஜய்க்கு அண்ணாமலை டீம் எதிர்ப்பு தெரிவிக்கிறது. அதேநேரம், விஜய் வந்தால் தமிழ்நாட்டில்
தேஜகூ நிச்சயம் வெற்றி பெறும் என்று நம்புகிறார்கள்.
அதனால் தொடர்ந்து பலரும் விஜய்க்கு அழுத்தம் கொடுத்துவருகிறார்கள்.
திமுகவை விரட்டியடிப்பதில் ஒன்றாக இருக்கலாம். திமுக எதிர்ப்பு வாக்குகள் பல திசைகளில்
சிதறாமல் இருக்க வேண்டும் என்றால் புதிய அரசியல் சக்திகள் ஒன்றிணைய வேண்டும் என்பதே
அந்த கட்சியின் வாதமாக கூறப்படுகிறது.
விஜய் தனித்து போட்டியிட்டால் அது மறைமுகமாக திமுகவிற்கு சாதகமாக
அமையலாம் என்றும் சில அரசியல் வட்டாரங்களில் கருத்துகள் எழுந்துள்ளன.. மாறாக அதிமுக
மற்றும் பாஜக இணைந்த கூட்டணியில் தமிழக வெற்றிக் கழகம் சேர்ந்தால் உரிய தொகுதிகளும்
அரசியல் மரியாதையும் வழங்கப்படும் என்று ஆஃபர்கள் தரப்பட்டுள்ளதாக வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.
த்ரிஷா விவகாரத்திற்குப் பிறகு விஜய் ஆடிப்போய் இருக்கிறார். தனித்து
நின்று தோல்வி அடைந்தால் அடுத்து வரும் திமுக ஆட்சியில் நிம்மதியாக இருக்கவே முடியாது
என்று அஞ்சுகிறார்.
அதேநேரம், முதல்வர் வேட்பாளர் என்ற கோஷம் அடிபடுவது இமேஜை பாதிக்கும்
என்றும் யோசிக்கிறார். பாசிச பாஜகவுடன் கூட்டணி சேர்ந்தாவது ஜெயிக்க வேண்டுமா என்று
சிந்திக்கிறார்.
அதேநேரம், அதிமுக விஜய் வரவை கண்டுகொள்ளவில்லை. கூட்டணி ஆட்சி
கோஷத்தை தூக்கியெறிந்துவிட்டு விஜய் வரவேண்டும் என்று கோரிக்கை வைக்கிறார்கள். அப்படி
பார்த்தால் கூட்டணி உருவாக வாய்ப்பில்லை என்றே தெரிகிறது.
அதேநேரம், வேட்பாளர் குளறுபடி, பணப்பிரச்னை, த்ரிஷா சிக்கல், ஜனநாயகன்
பஞ்சாயத்தைத் தீர்க்க வேண்டும் என்றால் பாஜகவுடன் கூட்டணி வைத்தே தீர வேண்டும். என்ன
செய்யப்போகிறார் விஜய்..?
