News

பிரேமலதாவுக்கு ஒண்ணு. திமுகவுடன் காங்கிரஸ் பஞ்சாயத்து ஓவர்.

Follow Us

எப்படியாவது விஜய்யை கூட்டணிக்குள் கொண்டுவந்தால் வெற்றி நிச்சயம் என்பதற்காக அவரை நயினார் நாகேந்திரன், தமிழிசை செளந்தர்ராஜன் தொடங்கி அத்தனை பாஜகவினரும் ஆர்வமாக அழைத்தார்கள். கொடி தெரியுது, பிள்ளையார் சுழி போட்டாச்சு என்று எடப்பாடி பழனிசாமியும் தலை அசைத்தார்.

ஆனால், விஜய் விடாப்பிடியாக கூட்டணி வைத்தால் காங்கிரஸ் கட்சியுடன் மட்டுமே வைப்பேன் என்று உறுதியாக நின்றார். ஆனால், அவரை காங்கிரஸ் ஏமாற்றிச் சென்று விட்டது. தனியே நின்றால் செல்லுபடியாகாது என்பது தெரிந்து இப்போது அடுத்தகட்டத் தலைவர்கள் மூலம் பாஜகவுக்கு அழைப்பு விடுத்தார்.

விஜய்யை நம்பி அழைப்பு கொடுத்த பாஜக தலைவரை கழுத்தைப் பிடித்து வெளியே தள்ளி, கூட்டணிக்கு வாய்ப்பே இல்லை என்பதை உறுதிபடுத்திவிட்டது.

சமீபத்தில் பாஜக மாநில செய்தித் தொடர்பாளராக இருந்த ஏ.என்.எஸ். பிரசாத், ‘திமுகவை ஆட்சிக்கு வரவிடாமல் தடுப்பதே தனது முக்கிய இலக்கு என விஜய் பல்வேறு மேடைகளில் தொடர்ந்து கூறி வருகிறார் என்றால், அதற்கான நடைமுறை அரசியல் முடிவாக அவர் அதிமுக – பாஜக தலைமையிலான தே.ஜ.கூட்டணிக்கு வரவேண்டும்’ என்று அழைப்பு விடுத்திருந்தார்.

கூட்டணிப் பேச்சுவார்த்தைகள் கிட்டத்தட்ட முடிவடைந்த நிலையில் விஜய்யை அழைப்பது கூட்டணிக்குள் குழப்பத்தை ஏற்படுத்தும் என்பதை உணர்ந்து நயினார் நாகேந்திரன் அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளார். நயினார் விடுத்துள்ள அறிக்கையில், ‘தமிழக பாரதிய ஜனதா கட்சியின் மாநில செய்தித் தொடர்பாளர் ஏ.என்.எஸ்.பிரசாத், இப்பொழுது முதல் அந்த பொறுப்பிலிருந்து விடுவிக்கப்படுகிறார். மேலும், சட்டமன்ற தேர்தல் மாநில பணிக்குழுவில் அவருக்கு அளிக்கப்பட்ட ஊடகத்துறை பொறுப்பாளர் என்ற பொறுப்பிலிருந்தும் விடுவிக்கப்படுகிறார்’ என்று அறிவித்துவிட்டார்.

அதாவது விஜய்க்கு கேட்டை குளோஸ் செய்துவிட்டனர். இப்போது விஜய்க்கு உள்ள ஒரே வாய்ப்பு சீமான் மட்டும்தான். அங்கே போவாரா..?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share via
Copy link