News

பிரேமலதாவுக்கு ஒண்ணு. திமுகவுடன் காங்கிரஸ் பஞ்சாயத்து ஓவர்.

Follow Us

சோழ மண்டலம் தஞ்சையில் விஜய் இன்று பரப்புரை மேற்கொண்டார். சங்கீதா குற்றச்சாட்டுக்குப் பிறகு முதன்முதலாக மேடை ஏறுவதால் அதுகுறித்து ஏதேனும் பேசுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அப்படியொரு விஷயம் நடந்ததாகவே விஜய் காட்டிக்கொள்ளவில்லை.

வழக்கம்போல் இன்றும் அவரது வேனுக்குப் பின்னே கூட்டம் வழக்கம்போல் அலை மோதியது. ஏகப்பட்ட ரசிகர்கள் ஹெல்மட் போடாமல் பின் தொடர்ந்து வந்து கீழே விழுந்தார்கள். விஜய்யும் வழக்கம் போல் எதுவும் கண்டுகொள்ளாமலே போய்விட்டார்.

இன்றைய கூட்டத்தில் விஜய், ‘’காஞ்சிபுரத்தில வேலூர்ல நம்மளோட விஷன பத்தி சொன்னோம் இல்லையா அதே மாதிரி இங்கேயும் சில விஷன்ஸ சொல்லணும் இது மத்தவங்க மாதிரி தேர்தல் வாக்குறுதின்னு சொல்லி ஏமாத்துறது கிடையாது. நம்மள நம்புற மக்களுக்கு நம்பிக்கை தர்றது, நம்ம ஆட்சிக்கு வந்ததும் இதெல்லாம் செய்ய நடவடிக்கை எடுப்போம்னு சொல்றது டெல்டா விவசாயிகள் சமீபத்தில கூட உரத்தட்டுப்பாட்டை சந்திச்சீங்கல்ல, சில பேர் உரத்தை பதுக்கி வச்சு அதிக வேலைக்கு வித்ததா நியூஸ்லாம் கூட வந்துச்சு . நம்ம டிவிகே ஆட்சி வந்ததும் உரத் தட்டுப்பாடு இல்லாம பார்த்துக்குவோம்.

ஐந்து ஏக்கர் வரை நிலமுள்ள விவசாயிகள் வேளான் கூட்டுறவு வங்கிகளில் வாங்கிய பயிற்கடன் முழுமையாக ரத்து செய்வதற்கும் ஐந்து ஏக்கருக்கு மேல் உள்ள விவசாயிகள் வேளான் கூட்டுறவு வங்கிகளில் வாங்கிய பயிர்கடன் 50 சதவீதம் வரை ரத்து செய்வதற்கான சாத்திய கூறுகளை ஆராய்ந்து உறுதியாக நடவடிக்கை எடுப்போம். திமுக மாதிரி எல்லாருக்கும்னு சொல்லிட்டு அதுல தகுதி பிக்ஸ் பண்ணி பாகுபாடு காட்டி ஏமாற்ற மாட்டோம். எல்லாத்தையும் வெளிப்படையாக சொல்லுவோம்.

இரண்டு ஏக்கர் வரை நிலமுள்ள விவசாயிகள் மற்றும் நிலமற்றவர்கள் குடும்பத்தில் யாரும் மாநில மற்றும் ஒன்றிய அரசு ஊழியராக இல்லாமல் இருக்கும் பட்சத்தில் அவர்களின் குழந்தைகளின் பொறியியல் மற்றும் மருத்துவம் உள்ளிட்ட தொழிற்கல்வி முதல் அனைத்து வகை படிப்புகளுக்குமான முழு செலவையும் அரசே ஏற்கும். விவசாயிகளின் விருப்பத்திற்கு எதிராக எந்த திட்டமாக இருந்தாலும் ஒன்றிய அரசின் நெருக்கடியே இருந்தாலும் அந்த திட்டத்தை உங்களுடைய டிவிகே ஆட்சி முழுமையாக நிராகரிக்கும். எப்போதும் விவசாயிகளின் பக்கமே நம் ஆட்சி நிற்கும்.

கொள்முதல் நிலையங்களில் முறையாக நெல்மூட்டைகள் பாதுகாக்கப்படும். நெல் முளைத்து வீணாவதை பார்த்துக்கொண்டு நமது அரசு சும்மா இருக்காது போதுமான கொள்முதல் நிலைய வசதிகள் ஏற்படுத்தப்படும். அதேபோல கொள்முதல் நிலையங்களில் கொள்முதல் செய்வதற்கோ மூட்டை ஏற்றி இறக்கவோ ஒரு பைசா கமிஷன் வாங்காமல் பார்த்து கொள்ளப்படும். அப்படி கமிஷன் வாங்குவது யாராக இருந்தாலும் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.

500 ரேஷன் கார்டுகளுக்கு ஒரு ரேஷன் கடை என்ற வரையறை நிர்ணயிக்கப்படும். கிராமங்களிலும் இடையாளர் நியமிக்கப்படுவார். பெண் விற்பனையாளருக்கு பெண் இடையாளர் ஆண் விற்பனையாளருக்கு ஆண் இடையாளர் என்பது பின்பற்றப்படும். ரேஷன் கடைகளில் அரிசி தவிர அனைத்து பொருள்களும் பாக்கெட் செய்து விநியோகிக்கப்படும்.

மீனவர்களுக்கு ஒன்றிய அரசு சட்டப்படியான பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும். அதற்கான உண்மையான உணர்வு பூர்வமான அழுத்தத்தை ஒன்றிய அரசுக்கு நமது  அரசு கொடுக்கும். நான் மீண்டும் மீண்டும் சொல்றேன் கல்வி மருத்துவம் ரேஷன் குடிநீர் சாலை வசதி பஸ் வசதி இது மாதிரி அடிப்படை விஷயங்களுக்காகத்தான் நம் அரசு முதல்ல முக்கியத்துவம் கொடுக்கும், எனக்கு நம்மளோட குழந்தைகள் நம்ம பெண்கள் நம்ம இளைஞர்கள் லைஃப்புக்கு முன்னுரிமை கொடுக்கணும்.

அரசு வேலை வாய்ப்புகள் மட்டுமில்லாமல் தனியார் வேலை வாய்ப்புகளுக்கான வழியையும் உத்தரவாதத்தையும் உருவாக்கணும். அப்படி நாம உருவாக்கிட்டாலே அவங்களுக்கான ரூட்டை நம்ம இளைஞர்கள் அவங்களே தேர்ந்தெடுத்துப்பாங்க. இத்தனை கோடி அத்தனை கோடி ஒப்பந்தம்னு சொல்லி விளம்பரம் மட்டும் செய்யாம உண்மையான ஒப்பந்தம் போட்டு வெள்ளை அறிக்கை வெளியிட்டு அதை செயல்படுத்தினாலே போதும் எல்லாம் தன்னாலே நடக்கும்…’’ என்று பேசியிருக்கிறார்.

இவ்வளவு பேசினீங்க, சங்கீதாவுக்கும் ஒரு தகவல் சொல்லியிருக்கலாம் என்று விஜய் ரசிகர்கள் வருத்தப்படுகிறார்கள்.

நாம் தமிழர் கட்சியினர், ‘’எதுக்கு அடுத்த பிறவி, இப்போதே விவசாயியாக மாறிவிடலாமே, யார் தடுப்பது?’’ என்று கேள்வி எழுப்புகிறார்கள். அதேபோல் 500 கார்டுக்கு ஒரு ரேஷன் கடை என்பதும் கடுமையான கிண்டலாகியுள்ளது.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share via
Copy link