News

முதல்வர் போட்டியில் தனுஷ்…? வெளுக்கும் விஜய் ரசிகர்கள்

Follow Us

முதல்வர் விஜய் தயவில் அமைச்சராக அமர்ந்திருக்கும் காங்கிரஸ் எங்களையே மிரட்டுவதா என்று தவெகவினர் கொந்தளிக்கிறார்கள்.

கன்னியாகுமரியில் பேசிய தமிழக சுற்றுலாத்துறை அமைச்சர் ராஜேஷ்குமார், “2029 பாராளுமன்ற தேர்தலில் பாரத பிரதமர் வேட்பாளர் எங்களுடைய தலைவர் ராகுல்காந்தி தான். ஒருவேளை தமிழக வெற்றிக்கழகம் அதற்கு உடன்படவில்லை என்றால், தமிழக வெற்றி கழக அமைச்சரவையில் இருக்கும் இரண்டு அமைச்சர்களும் எங்கள் பொறுப்புகளை துறப்போம்” என்று பேசியிருக்கிறார். இதற்குத்தான் தவெகவினர் கொதிக்கிறார்கள்.

இதுகுறித்து பேசும் தவெகவினர், ‘’ஒவ்வொரு கட்சிக்கும் ஒரு கொள்கை, ஒரு நிலைப்பாடு இருக்கும். அதை கூட்டணிக் கட்சிகள் மதிக்க வேண்டும். ஆனால், தவெக தலைவர் விஜய்யை பிரதமர் வேட்பாளர் என்று அழைக்கக்கூடாது.. கருத்துக் கணிப்பு சொல்வதை மதிக்கக் கூடாது. டெல்லி பக்கம் வரவே கூடாது. கேரளாவில் கட்சி தொடங்கக்கூடாது. கர்நாடகாவைப் பற்றிப் பேசக்கூடாது என்றெல்லாம் காங்கிரஸ் பேசுவது வியப்பாக இருக்கிறது.

ராகுல் காந்தி தன்னை இது வரை ஒரு முறையாவது பிரதமர் வேட்பாளர் என்று சொல்லி வாக்கு கேட்டிருக்கிறாரா? இல்ல காங்கிரஸ் கட்சி அவரை பிரதமர் வேட்பாளராக முன்னிறுத்தி பிரச்சாரங்களை முன்னெடுத்துள்ளதா? அப்படி எதுவுமே இல்லை. ஆனாலும், இந்த மிரட்டல் எதற்காக..?

திமுகவை மிரட்டியதுபோல விஜய்யை காங்கிரசால் மிரட்ட முடியாது. ஆட்சி கவிழ்ப்பு மிரட்டலும் எடுபடாது. மறுதேர்தல் வந்தால் நாங்கள் மெஜாரிட்டியாக ஜெயிப்போம்’’ என்கிறார்கள்.

செம செப்பல் ஷாட். 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share via
Copy link