Share via:
ஜனநாயகன் படம் வெளியாவதில் சிக்கல், கரூர் வழக்கில் விசாரணை நெருக்கடி,
தேர்தல் பிரசாரம் செய்ய வெளியே வருவதற்கு இடைஞ்சல் என்று விஜய்யின் தவெகவுக்கு நெருக்கடி
மேல் நெருக்கடி இருக்கும் நிலையில், பொதுச்சின்னம் பெறுவதிலும் சிக்கல் இருப்பது தவெகவினரை
அதிர வைத்துள்ளது.
விஜய்க்கு விசில் சின்னம் ஒதுக்கப்பட்டுவிட்டதாக முதலில் தகவல்கள்
வெளியாகின. ஆனால், இப்போது அதற்கு வாய்ப்பு இல்லை என்கிறார்கள். அதாவது தேர்தல் கமிஷன்
சின்னம் விஷயத்தில் விஜய்க்கு முட்டுக்கட்டை போடுகிறார்களாம்.
விதிமுறைப்படி ஏற்கனவே தேர்தலில் போட்டியிட்ட கட்சியாக இருந்தால்
குறைந்தது 6 சதவீத வாக்குகள் உடன் 2 சட்டமன்றத் தொகுதிகளில் வென்றிருக்க வேண்டும்.
இல்லையெனில் குறைந்தது 7 இடங்களில் வென்றிருப்பது அவசியம்.
எந்த தொகுதியிலும் வெற்றி பெறாவிட்டால் குறைந்தது 8 சதவீத வாக்குகளை
பெற்றிருக்க வேண்டும். அப்போது தான் அங்கீகரிக்கப்பட்ட கட்சியாக அறிவிக்கப்படும். இதைக்
கருத்தில் கொண்டு தனிச் சின்னம் ஒதுக்கப்படும்.
பொதுச் சின்னம் பெறுவதற்கு தேர்தல் ஆணையத்தின் புதிய விதிமுறைகளின்
படி, கடந்த 3 நிதியாண்டுகளுக்கான வரவு செலவு கணக்கு அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும்.
அதில், கட்சிக்கு வந்த நன்கொடைகள் மற்றும் இதர செலவீனங்கள் உள்ளிட்டவை இடம்பெறுவது
அவசியம். ஒருவேளை கட்சி தொடங்கி 3 ஆண்டுகள் ஆகவில்லை எனில், அது பதிவு செய்யப்பட்ட
காலத்தில் இருந்து கணக்குகளை தேர்தல் ஆணையத்திடம் சமர்பிக்க வேண்டும்.
இந்த விதிமுறை தவெகவுக்குப் பொருந்தாது என்பதால் 2026 சட்டமன்றத்
தேர்தலில் தவெகவிற்கு பொதுச் சின்னம் கிடைக்காத சூழல் காணப்படுகிறது. இத்தகைய சூழலில்
தவெக சார்பில் நிறுத்தப்படும் வேட்பாளர்கள் ஒவ்வொருவருக்கும் தனிச்சின்னம் கிடைக்கும்.
இது கட்சிக்குச் சிக்கல் ஏற்படுத்தும்.
எனவே, இப்போதே நீதிமன்றம் சென்று பொதுச்சின்னம் கேட்பதற்கு விஜய்
திட்டமிட்டு வருகிறாராம். இந்த தகவல் அறிந்து விஜய் கட்சியினர் கடும் கோபத்திற்கு ஆளாகியுள்ளனர்.
இப்படி செல்லும் இடமெல்லாம் முட்டுக்கட்டை போட்டால் எப்படி..?