Share via:
திமுக கூட்டணி ஏற்கெனவே ஹவுஸ்ஃபுல்லாக இருக்கிறது. இந்நிலையில் ஓபிஎஸ் ஆட்கள் புதிதாக யாரையும் கட்சிக்குள் இணைக்க வேண்டாம். பிரேமலதா திமுக கூட்டணிக்கு வருவதாக பேச்சு கிளம்பியிருக்கிறது. அவர் மட்டும் வேண்டவே வேண்டாம் என்று திமுகவினர் போர்க்கொடி தூக்கியுள்ளனர்.
இது குறித்துப் பேசும் திமுகவினர், ‘’இப்போது திமுக அமைச்சரவையில் 3-ல் 1 பங்கு பேர் அதிமுக-வில் இருந்து வந்தவர்கள் தான். அதோடு புதிதாக திமுகவில் வந்து சேர்ந்து கொண்டிருக்கும் அத்தனை பெருந்தலைகளுமே தங்களுக்கான தேர்தல் வாய்ப்புகளை உறுதிப்படுத்திக் கொண்டே கட்சி மாறுகிறார்கள்.
அதிமுக எம்எல்ஏ-வான மனோஜ் பாண்டியனுக்கு அவரது ஆலங்குளம் தொகுதியைத் தருவதற்கு திமுக சம்மதித்திருக்கிறது. வைத்தியலிங்கத்துக்கு அவரது ஒரத்தநாடு தொகுதியைக் கொடுக்கப் போவதாகச் சொல்கிறார்கள். அமமுக-வில் இருந்து வந்திருக்கும் ஜமீன்தார் மாணிக்கராஜா கோவில்பட்டி தொகுதியை தலைமையிடம் கேட்டிருப்பதாகத் தெரிகிறது.
இப்படி, மற்ற கட்சிகளில் இருந்தவர்களையே ஜெயிக்க வைத்து மந்திரியாக்கினால் காலங்காலமாக கட்சிக்கு உழைப்பவர்களுக்கு எப்படி மரியாதை கிடைக்கும்..?
மாற்றுக் கட்சிகளில் இருந்து விலகி திமுக-வில் இணையும் விஐபி-க்கள் யாரும் கட்சியை பலப்படுத்த 10 ஆயிரம் பேருடன் வருவதில்லை. மாறாக, தங்களது சொத்தையும், அரசியல் செல்வாக்கையும் பாதுகாத்துக் கொள்ளவே அவர்கள் இங்கு வருகிறார்கள். இதனால் பாரம்பரிய திமுக-வினருக்கு தேர்தலில் போட்டியிடும் வாய்ப்புகள் கண்ணெதிரெ நழுவிக் கொண்டிருக்கிறது.
இப்போது புதிதாக ஓபிஎஸ் வருவதாகச் சொல்கிறார்கள். அதேபோல் பிரேமலதா வருவதற்கும் அச்சாரம் போடப்படுகிறது. பிரேமலதா வருகிறார் என்கிறார்கள். இவர்கள் வருவதால் திமுக வெற்றி நிச்சயம் என்பது சரிதான். ஆனால், திமுகவினருக்கு என்ன கிடைக்கும்..? எனவே, இப்போது இருக்கும் கூட்டணியே போதும்….’’ என்று எதிர்ப்புக் குரல் கொடுக்கிறார்கள்.
இதெல்லாம் ஸ்டாலின் காதில் கேட்குமா..?
