News

விஜய் அவசரக் கூட்டம். பனையூரில் விவசாயிகள் சந்திப்பு..?

Follow Us

மாதம்தோறும் கரன்ட் பில் கட்டுவதற்கு உத்தரவாதம் கொடுத்த ஸ்டாலின் அரசு, இதுவரை தேர்தல் அறிக்கையை நிறைவேற்றவில்லை. எனவே, இதையே முதல் அடியாக எடுத்துவைத்து எடப்பாடி பழனிசாமி தேர்தல் பிரசாரத்தைத் தொடங்கியிருக்கிறார்.

இதுகுறித்து எடப்பாடி பழனிசாமி இன்று, ‘’விடியா திமுக ஆட்சியில், கடந்த ஐந்து ஆண்டுகளாக மக்கள் படும் இன்னல்களை வீடுதோறும் கொண்டு சேர்க்கும் பொருட்டு இன்று முதல், கழக அமைப்பு ரீதியாக செயல்பட்டு வரும் 82 மாவட்டக் கழகங்களும், கழக தகவல் தொழில்நுட்பப் பிரிவும் இணைந்து, விடியா திமுக ஆட்சிக்கு எதிராக, “விடியா ஆட்சி உங்கள் வீட்டு Bill-லே சாட்சி” என்ற தலைப்பில், AIADMK Connect செயலியை பயன்படுத்துங்கள்

கையடக்க பிரிண்டர்கள் மூலமாக முன்னேடுத்து, மாண்புமிகு அம்மா அவர்களின் நல்லாசியோடு எனது தலைமையில் நடைபெற்ற கழக ஆட்சிக் காலத்தையும்; தற்போது நடைபெற்று வரும் விடியா திமுக ஆட்சிக் காலத்தையும் ஒப்பிட்டு, கடந்த ஐந்தாண்டுகளில் விலைவாசி ஏற்றத்தால் மக்களுக்கு ஏற்பட்டுள்ள இழப்புகள் மற்றும் கூடுதல் சுமைகளால், ஒவ்வொரு வீட்டிற்கும் இந்த விடியா திமுக ஆட்சி கொடுத்திருக்கும் Punishment Bill-ஐ இல்லத்தரசிகள் மற்றும் குடும்பத்தினரின் பார்வைக்கு அச்சிடப்பட்ட பேப்பராக, துல்லியமாக எடுத்துக் கொடுத்து அவர்களிடத்தில் விழிப்புணர்வு பிரச்சாரம் மேற்கொள்வோம், விடியா திமுக ஆட்சிக்கு முடிவுரை எழுதுவோம்…’’ என்று பிரசாரத்தை ஆரம்பித்துள்ளார்.

திமுக என்ன செய்யும் என்று பார்க்கலாம்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share via
Copy link