News

விஜய் அவசரக் கூட்டம். பனையூரில் விவசாயிகள் சந்திப்பு..?

Follow Us

தேர்தல் கூட்டணி குறித்து இன்று தன்னுடைய முடிவு அறிவிப்பதாகக் கூறிய ஓ.பன்னீர்செல்வம் மீண்டும் அதிமுகவில் இணைவதே லட்சியம். இதற்கு டிடிவி தினகரன் உதவவேண்டும் என்று காலில் விழாத குறையாக கோரிக்கை வைத்திருக்கிறார்.

இன்று செய்தியாளர்களிடம் பேசிய ஓபிஎஸ், ‘’அதிமுக தொண்டர்களின் அடிப்படை உரிமைகளை மீட்டெடுக்கின்ற பாதுகாக்கின்ற கழகமாக நாங்கள் உருவாகி சட்டப்போராட்டத்தை நீதிமன்றத்தில் நடத்திக்கொண்டு இருக்கிறோம். நாடாளுமன்ற பொதுத்தேர்தலில் ராமநாதபுரத்தில் நான் போட்டியிட முக்கிய காரணம் எங்கள் பக்கம் தொண்டர்கள் இருக்கிறார்கள் என்பதை நிரூபித்து காண்பிப்பதற்காகத்தான். பலாப்பழம் சின்னத்தில் 12 நாட்கள்தான் என்னுடைய தேர்தல் பிரச்சாரம் இருந்தது. அந்த தேர்தலில் என்னை எதிர்த்து நின்றவர்கள் எவ்வாறெல்லாம் தேர்தலை நடத்தினார்கள் என்பது உங்களுக்கு நன்றாக தெரியும்.

தமிழகத்தில் இருக்கும் பல்வேறு தொகுதிகளில் இருந்து 6 பேரை ஓ.பன்னீர்செல்வம் என்ற பெயரில் அங்கே கொண்டுவந்து நிறுத்தினார்கள். எப்படியாவது பன்னீர்செல்வத்தை தோல்வியடைய செய்ய வேண்டும். தொண்டர்களும், மக்களும் அவர் பக்கம் இல்லை என்ற சூழ்நிலையை உருவாக்க செயற்கையாக செய்த சூழ்ச்சிதான் அது.

அந்த சூழ்ச்சிகளையெல்லாம் முறியடித்து அதிமுக தொண்டர்களின் அடிப்படை உரிமைகளை மீட்டெடுப்பதற்காகத்தான் இந்த கழகம் உருவாக்கப்பட்டிருக்கிறது என்பதனையும் எங்கள் நோக்கம் சட்டப் போராட்டம் நடத்தி அந்த உரிமைகளை மீட்டு தருவதுதான் எங்கள் நோக்கமாக இருந்திருக்கிறது  என்பதையும், தேர்தலில் தனிக்கட்சி துவங்குவதில் இல்லை என்றும் தேர்தலில் போட்டியிடுகின்ற முடிவினை இன்னும் நாங்கள் எடுக்கவில்லை என்றும் பிரிந்துகிடக்கும் அதிமுகவின் சக்திகள் யாராலும் வெல்லமுடியாத இயக்கமாக அதிமுகவை அம்மா அவர்கள் உருவாக்கிய சூழலை உருவாக்க வேண்டும்  என்பதற்கான சட்டப் போராட்டம்தான் எங்கள் போராட்டம்.

அந்த நிலையில் இருந்து நாங்கள் மாறுபட வேண்டும் என்று சொன்னால் பிரிந்து கிடக்கும் அதிமுகவின், புரட்சித் தலைவரின், அம்மாவின் சக்திகள் ஒன்றிணைய வேண்டும் என்பதுதான் எங்களின் தலையாய கோரிக்கை.

இன்றைக்கு எதிரும் புதிருமாக இருந்த டிடிவி தினகரன் அவர்களும், எடப்பாடி பழனிசாமியும் ஒன்றிணைந்திருக்கிறார்கள். தினகரன் நினைத்தால் இன்றைக்கு இபிஎஸ் உடன் பேசி இணைக்கலாம். அது யார் கையில் இருக்கிறது டிடிவி கையில் இருக்கிறது. நாங்கள் இணைய வேண்டும் என்று கூறி வருகிறோம். அவரும் இணைய வேண்டும் என்று தான் கூறி வருகிறார். அதில் இருந்து டிடிவியும் மாறுபடமாட்டார். அவர் அந்த கருத்தை அதிமுகவில் வலியுறுத்த வேண்டும். 

தேர்தலில் போட்டியிடுவதற்காக இந்த இயக்கத்தை தொடங்கவில்லை. கழகத்தின் சட்ட விதியை மீட்டெடுப்பதற்காக சட்டப் போராட்டம் நீதிமன்றத்தில் நடக்கிறது. பதில்: ஒண்ணு சேருவோம்னு சொல்லி இருக்கார்ல. நான் ரெடி. டிடிவி தினகரன் அவர்களும் அவருடைய அருமை அண்ணன் எடப்பாடி பழனிசாமி அவர்களும் ரெடியா? கேட்டுச் சொல்லுங்க…’’ என்று பரிதாபமாகக் கெஞ்சியிருக்கிறார்.

எடப்பாடி பழனிசாமி மனம் இறங்குவாரா..?

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share via
Copy link