Share via:
மகாராஷ்டிர மாநில துணை முதல்வர் அஜித் பவார் விமான விபத்தில் உயிர்
இழந்திருபது குறித்து, உச்சநீதிமன்றத்தின் நேரடி கண்காணிப்பில் விசாரணை நடத்த வேண்டும்
என்று மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி கடுமையாக விமர்சனம் வைத்திருக்கிறார்.
அஜித்பவார் மீது பாஜக 70,000 கோடி ரூபாய் ஊழல் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டது.
அவர் கட்சியை உடைத்துக்கொண்டு பாஜகவுக்கு ஆதரவு கொடுத்ததும் அந்த குற்றச்சாட்டு மீதான
விசாரணை நிறுத்தப்பட்டது. துணை முதல்வர் பதவியும் கொடுக்கப்பட்டது.
இந்நிலையில் பாஜக கூட்டணியில் தொடர்ந்து இருக்கவேண்டுமா என்று
அஜித்பவார் சில தினங்களுக்கு முன்பு கேள்வி எழுப்பியிருந்தார். இந்நிலையில், விமான
விபத்தில் அவர் இறந்திருப்பது பல்வேறு கேள்விகளை எழுப்பியிருக்கிறது.
மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ளாட்சி தேர்தலுக்கான பரப்புரை மேற்கொள்வதற்காக
மாநில துணை முதல்வர் அஜித் பவார் சென்ற தனி விமானம் தரையிறங்கும் போது ஓடுத்தளத்தில்
நிலைதடுமாறி, கீழே விழுந்து விபத்துள்ளானது. விழுந்த சிறிது நேரத்தில் விமானம் தீப்பிடித்து
வெடித்ததாகவும் கூறப்படுகிறது.
தகவலின் பேரில் விரைந்து வந்த மீட்பு குழுவினர் அஜித்பவார் மற்றும்
அவருடன் பயணித்த 5 பேரில் உடல்களை மீட்கப்பட்டது. அஜித் பவாரின் அகால மரணம் குறித்து நாட்டில் பல்வேறு
கருத்து உலவும் நிலையில் மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி பரபரப்பு குற்றச்சாட்டு
கூறியிருக்கிறார்.
மம்தா, ‘’இந்த நாட்டில் மக்கள் மற்றும் அரசியல் தலைவர்கள் கூட
இனி பாதுகாப்பாக இல்லை என்பது எனக்கு அதிர்ச்சியை அளிக்கிறது. இந்த நாட்டில் அரசியல்
தலைவர்களுக்கும் சாதாரண மக்களுக்கும் பாதுகாப்பு இல்லை. அஜித் பவாரின் மரணம் குறித்து
உச்ச நீதிமன்ற மேற்பார்வையில் விசாரணை நடத்த வேண்டும். மேலும், சரத் பவாருடன் அஜித்
பவார் மீண்டும் இணைய இருந்த நிலையில் விமான விபத்தில் உயிரிழந்தது சந்தேகத்தை ஏற்படுத்துகிறது’’
என்ற பரபரப்பு குற்றச்சாட்டை வெளிப்படையாகத் தெரிவித்திருக்கிறார்.
என்னமோ நடக்குது, மர்மமாக இருக்குது.
