Share via:
என்னுடைய ரசிகர்களை நான் தப்பாக வழி நடத்த மாட்டேன் என்று வீராப்பு
பேசிய நடிகர் விஜய், இப்போது கார்ப்பரேட் விளம்பரத்தில் நடித்திருப்பது பெரும் சர்ச்சையாகியுள்ளது.
சினிமாவில் உச்சம் தொட்டாலும் கார் ரேஸிங் மீதுதான் அஜித்துக்கு
ஆர்வம் அடிகம். அஜித்குமார் ரேஸிங் என்ற கார் பந்தய அணியை நடத்தி வருகிறார். இதற்காக
இதுவரை திரைப்படங்கள் மூலமாக தான் சம்பாதித்த பணத்தை அதில் முதலீடு செய்துள்ளார்.
வெளிநாட்டு வீரர்களுடன் களமிறங்கியுள்ள அஜித்தின் கார் ரேஸிங்
அணிக்கு ஏராளமான முதலீடுகள் தேவைப்படும் நிலையில், அஜித்குமார் ரேஸிங் அணி கேம்பா குளிர்பான
நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்துள்ளது.
பெப்சி, கோலா வருகைக்கு முன்பு இந்தியாவில் பிரபலமாக இருந்த இந்த
கேம்பா நிறுவனத்தை கடந்தாண்டு ரிலையன்ஸ் வாங்கியது. இதை மீண்டும் புத்துயிர் பெற வைக்க
ரிலையன்ஸ் முடிவு செய்துள்ள நிலையில், கேம்பா குளிர்பானத்தை கையில் ஏந்தியவாறு உள்ள
அஜித்தின் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.
ஒரு கார் ரேஸிங் அணியை நடத்துவது என்பது மிக மிக சவாலான விஷயம்
ஆகும். இந்த சூழலில், தனது அஜித்குமார் ரேஸிங் அணியின் ஸ்பான்ஸர்களில் ஒருவரான கேம்பா
நிறுவனத்திற்காக அஜித் விளம்பரத்தில் நடித்துள்ளார்.
அஜித்குமார் சிறு வயதில் ஒரு செருப்பு விளம்பரத்தில் நடித்திருந்தார்.
பின்னர், பெரிய ஹீரோவாக உருவெடுத்த பிறகு நெஸ்கஃபே விளம்பரத்தில் நடித்திருந்தார்.
தற்போது மிக நீண்ட இடைவேளைக்குப் பிறகு குளிர்பான விளம்பரத்தில் நடித்துள்ளார். இந்த
விளம்பரத்தில் நடிப்பதற்காக அஜித்குமாருக்கு மிகப்பெரிய அளவில் ஊதியம் வழங்கப்பட்டுள்ளதாக
தகவல் வெளியாகியுள்ளது.
அஜித் தான் நடிக்கும் திரைப்படங்களின் புரமோஷன் நிகழ்ச்சியில்
பங்கேற்பதில்லை. ஏராளமான முதலீடுகள் தேவை என்பதாலே தற்போது தனது ஸ்பான்சர் விளம்பரத்தில்
அவர் நடித்திருப்பதாக கூறப்படுகிறது. மேலும், அஜித்குமார் நடிக்க உள்ள புதிய படத்திற்கும்
இதுவரை தயாரிப்பாளர் கிடைக்கவில்லை. அவர் அதிக ஊதியம் கேட்பதாலே இதுவரை தயாரிப்பாளர்
கிடைக்கவில்லை என்று கூறப்படுகிறது.
இந்த நிலையில் அவர் மீது கடுமையான விமர்சனம் வைக்கப்படுகிறது.
‘’அதாவது அஜித்தை வைத்து படம் எடுக்கிறவன் எல்லாம் என்ன அவ்வளவு கேனையா, இல்ல நீங்க
பெரிய புத்திசாலி என்று நினைப்பா..? படத்துக்கு புரமோஷன் பண்ண மாட்டேன், வர மாட்டேன்,
வெளியே மூஞ்சை காட்ட மாட்டேன் என்று உங்களுக்கு சோறு போட்ட சினிமாவை துச்சமாக நினைப்பவர்
ரேஸிங்கிற்கு மட்டும் புரமோஷன் செய்யலாமா..?’’ என்று கொதிக்கிறார்கள்.
