News

விஜய் அவசரக் கூட்டம். பனையூரில் விவசாயிகள் சந்திப்பு..?

Follow Us

கடந்த ஜல்லிக்கட்டு போட்டியில் இன்பநிதிக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டது பெரும் வைரலானது, எனவே இந்த முறை பாலமேடு ஜல்லிக்கட்டுப் போட்டிக்கு நடிகர் சூரியுடன் மேடை ஏறியிருக்கிறார் உதயநிதி. அதோடு முதல்நாள் அவனியாபுரம் ஜல்லிக்கட்டு மேடையில் அமைச்சர் மூர்த்தியின் கெட்ட வார்த்தை வீடியோ வைரலாகியுள்ளது.

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழகம் முழுவதும் பல்வேறு ஊர்களில் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெறுவது வழக்கம். தை முதல் நாளான நேற்று  அவனியாபுரத்தில் ஜல்லிக்கட்டு போட்டி சிறப்பாக நடந்து முடிந்தது. பரிசு விழா மேடையில் நடந்த தள்ளுமுள்ளுக்கு அமைச்சர் மூர்த்தி அவரது பாணியில் கெட்ட வார்த்தையில் திட்டினார். அந்த வீடியோ இப்போது பரபரப்பாகியுள்ளது.

இந்நிலையில், இன்று காலை பாலமேடு ஜல்லிக்கட்டு போட்டி ஆரம்பமானது. போட்டியின் தொடக்கமாக கோயில் காளைகள் அவிழ்த்துவிடப்பட்டன. அதை தொடர்ந்து முதல் முதல் சுற்றில் 100 காளைகளும், 50 மாடுபிடி வீரர்களும் களம் கண்டனர்.

முதலாவது சுற்று முடிவில் சின்னப்பட்டி தமிழரசன் 6 காளைகளை பிடித்து முன்னிலையில் உள்ளார். முதலாவது சுற்றின் முடிவில் மஞ்சம்பட்டியைச் சேர்ந்த துளசிராம் 4 காளைகளை அடக்கி 2ம் இடத்தில் உள்ளார். ஜல்லிக்கட்டு போட்டியில் 110 காளைகள் களம் கண்டது. இதில் 20 மாடுகள் பிடிபட்டது. பாலமேடு ஜல்லிக்கட்டு போட்டியில் 2 மாடுபிடி வீரர்கள், பார்வையாளர் ஒருவர் என 3 பேர் காயம் அடைந்துள்ளனர்.

இந்த போட்டிக்கு உதயநிதியுடன் யார் வருவார்கள் என்று ஆர்வமாக எதிர்பார்க்கப்பட்டது. மண்ணின் மைந்தன் என்ற வகையில் சூரி வந்ததும் கூட்டம் ஆரவாரம் செய்தது. அதேநேரம், யாராவது நடிகையைக் கூட்டிட்டு வந்திருக்கலாம் என்று புலம்பவும் செய்தார்கள். 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share via
Copy link