News

விஜய் அவசரக் கூட்டம். பனையூரில் விவசாயிகள் சந்திப்பு..?

Follow Us

 

கரூரில் 41 பேர் உயிரிழந்த துயர சம்பவம் தொடர்பான இரண்டாம் நாள் விசாரணைக்காக டெல்லியில் உள்ள சிபிஐ தலைமை அலுவலகத்தில் ஆஜரானார் தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய். இந்நிலையில் விஜய் கட்சிக்கு வெளிநாட்டு நிதி பெற்ற வகையில் வியூக வகுப்பாளர் ஜான் ஆரோக்கியசாமிக்கு சிக்கல் எழ வாய்ப்பிருப்பதாக செய்திகள் வெளியாகின்றன.

தவெக தலைவரான நடிகர் விஜய் கடந்த ஆண்டு செப்டம்பர் 27ம் தேதி கரூர் வேலுச்சாமிபுரம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது கூட்ட நெரிசலில் 41 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.இதுதொடர்பான வழக்கு உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி சிபிஐக்கு மாற்றப்பட்டது. இந்த வழக்கில் தவெக பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த், தேர்தல் பிரச்சார மேலாண்மை பொதுச் செயலாளர் ஆதவ் அர்ஜுனா, இணை செயலாளர் சி.டி.ஆர்.நிர்மல்குமார் ஆகியோர் டெல்லியில் உள்ள சிபிஐ தலைமை அலுவலகத்தில் ஆஜராகினார். அவர்களிடம் 100க்கும் மேற்பட்ட கேள்விகளை கேட்கப்பட்டன.

குறிப்பாக சிபிஐ அதிகாரிகள் நடிகர் விஜய் கூட்டத்திற்கு தேவையான பணம் எங்கிந்து வருகிறது. உயிரிழந்த குடும்பத்திற்கு கட்சியின் சார்பில் அளிக்கப்பட்ட நிதி எங்கிருந்து வந்தது. நடிகர் விஜய் செலவு செய்கிறாரா அல்லது கட்சியின் நிர்வாகிகளான ஆதவ் அர்ஜூனா மற்றும் புஸ்ஸி ஆனந்த், சி.டி.ஆர்.நிர்மல் குமார் செய்கிறாரா என்று கேட்டுள்ளனர். அதற்கு அவர்கள் விஜய்யின் அரசியல் ஆலோசகரான திருச்சியை சேர்ந்த ஜான் ஆரோக்கியசாமி தான் பணத்திற்கான அனைத்து ஏற்பாடுகளையும் செய்து வருவதாக வாக்குமூலம் அளித்துள்ளனர்.

இந்நிலையில் கடந்த 12ம் தேதி நடிகர் விஜய் சென்னையில் இருந்து தனி விமானத்தில் டெல்லி சென்று, சிபிஐ தலைமை அலுவலகத்தில் ஆஜரானார். அவருடன் கட்சியின் மூத்த நிர்வாகிகளான புஸ்ஸி ஆனந்த், ஆதவ் அர்ஜுனா, சி.டி.ஆர்.நிர்மல்குமார், மாவட்ட செயலாளர் மதியழகன் ஆகியோர் ஆஜராகினர். அப்போது தவெக நிர்வாகிகள் அளித்த வாக்குமூலத்தின் படி, நடிகர் விஜயிடம் சிபிஐ அதிகாரிகள் தனியாக விசாரணை நடத்தினர்.

சிபிஐ அதிகாரிகள் நடிகர் விஜயிடம் கரூர் கூட்டத்திற்கு காலத்தாமதமாக வர யார் ஆலோசனை கொடுத்து வழிநடத்தியது என்று கேட்டப்பட்டனர். அதற்கு விஜய் எனது அரசியல் ஆலோசகரான ஜான் ஆரோக்கியசாமிதான் அனைத்து யோசனைகளும் கொடுத்தார். அவர் கூறியபடிதான் நான் கட்சி கூட்டங்களில் பேசுவது, கலந்து கொள்வது எல்லாம் என்று சொன்னதாக கூறப்படுகிறது.

விஜய்யின் அரசியல் ஆலோசகர் ஜான் ஆரோக்கியசாமியின் பின்னணி குறித்து தனியாக விசாரணை நடத்தினர். ஜான் ஆரோக்கியசாமி கிறிஸ்துவ போதகர் என்று தெரியவந்தது. பல கிறிஸ்துவ பிராத்தனை கூட்டங்களில் ஜான் ஆரோக்கியசாமி பேசிய வீடியோக்களை பெற்று ஆய்வு செய்தபோது, அவர், வெளிநாடுகளில் உள்ள கிறிஸ்துவ அமைப்புகளுடன் நெருங்கிய தொடர்பில் இருந்ததும் அவருக்கு வெளிநாடுகளில் இருந்து பல நூறு கோடி ரூபாய் பணம் கிறிஸ்துவ தொண்டு நிறுவனங்கள் மூலம் வருவதும் தெரியவந்தது.

அதோடு இல்லாமல் ஜான் ஆரோக்கியசாமி கிறிஸ்துவ கூட்டங்களில் பேசும்போது, பிரதமர் மோடி மற்றும் உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆகியோர் ‘சாத்தானின் பிள்ளைகள்….. ஆர்.எஸ்.எஸ் அமைப்புகளிடம் தீவிரவாத பயிற்சி பெற்றவர்கள்’ என்று பேசியது தெரியவந்தது. இதையடுத்து சிபிஐ அதிகாரிகள் விஜய் அரசியல் ஆலோசகர் ஜான் ஆரோக்கியசாமி மீது தனி கவனம் செலுத்தி நடிகர் விஜய் உடனான தொடர்புகள் என்ன என்பது குறித்து விசாரணை நடத்திய போது, கிறிஸ்தவ மத வளர்ச்சிக்காக வெளிநாடுகளில் இருந்து நூற்றுக்கும் மேற்பட்ட கிறிஸ்தவ தொண்டு நிறுவனங்கள் மூலம் வழங்கிய பல நூறு கோடி பணத்தை நடிகர் விஜய் நடத்தும் தவெக கட்சி செலவுக்கு பயன்படுத்தியது தெரியவந்தது.

அதற்கான வங்கி கணக்கு விபரங்களை அனைத்தையும் சட்டவிரோத பணப்பரிமாற்றம் தொடர்பாக அமைப்புகளை கண்காணிக்கும் என்ஐஏ மூலம் உறுதியாகியது. வெளிநாட்டு கிறிஸ்தவ தொண்டு நிறுவனங்கள் உதவியுடன் தமிழகத்தில் 2026ம் ஆண்டு நடக்கும் சட்டமன்ற தேர்தலில் பிரதமர் மோடி மற்றும் அமித்ஷாவின் வியூகங்களை முறியடிக்க நடிகர் விஜய் மூலம் ஜான் ஆரோக்கியசாமி திட்டமிட்டது தெரியவந்துள்ளது. விஜய் . கட்சி ஆரம்பித்தது முதல் ஜான் ஆரோக்கிய சாமி உதவியுடன் தமிழகத்தில் பல நூறு கோடி பணம் வெளிநாடுகளில் இருந்து சட்டவிரோதமாக பரிமாற்றம் செய்யப்பட்டுள்ளதை மத்திய உளவுத்துறையும் உறுதி செய்துள்ளது.

இதையடுத்து சிபிஐ அதிகாரிகளிடம் முந்தைய விசாரணையின் போது ஆதவ் ஆர்ஜுனா, புஸ்ஸி ஆனந்த், சி.டி.ஆர்.நிர்மல் குமார் அளித்த வாக்குமூலம் அனைத்தும் உண்மையானது என தெரியவந்தது.

இந்நிலையில் இன்று ஆஜராகும் விஜய் மற்றும் ஜான் ஆரோக்கியசாமியிடம்  பணம் தொடர்பான கேள்விகளை வெளிநாட்டு தொண்டு நிறுவனங்களில் வங்கி கணக்கு விபரங்களுடன் நேரடியாக கேட்க உள்ளனர். வெளிநாட்டு பணம் சட்டவிரோதமாக தவெக கட்சிக்கு பயன்படுத்தியது உறுதியானால், ஜான் ஆரோக்கியசாமியை சிபிஐ அதிகாரிகள் என்ஐஏவிடம் ஒப்படைக்கப்படலாம். அதன் பிறகு அவரிடம் என்ஐஏ அதிகாரிகள் விசாரணை நடத்தி இறுதியில் கைது செய்யப்படலாம்.

இன்று சிபிஐ விசாரணைக்குப் பிறகாவது வாய் திறப்பாரா விஜய்.?  

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share via
Copy link