News

விஜய் அவசரக் கூட்டம். பனையூரில் விவசாயிகள் சந்திப்பு..?

Follow Us

கரூர் விபத்து விவகாரத்தை விசாரணை செய்துவரும் சிபிஐ, நேற்று விசாரணக்கு ஆஜரான விஜய், இந்த விவகாரத்தில் அவர் மனதில் இருந்த சந்தேகங்களை கொட்டித் தீர்த்ததாகக் கூறப்படுகிறது.  இதையொட்டி, இந்த வழக்கு தேர்தல் சமயத்தில் திசை மாறும் என்றும் சொல்லப்படுகிறது.

நேற்று டெல்லி சிபிஐ தலைமை அலுவலகத்தில் ஆஜரான தவெக தலைவர் விஜய்யிடம் 6 மணிநேரம் விசாரணை நடத்தப்பட்டது. கடந்த 12-ம் தேதி ஆஜரான நேரத்தில் விஜய்யிடம் 7 மணி நேரம் விசாரணை நடத்தப்பட்டது.

காலை 10.30 மணிக்கு தொடங்கிய விசாரணையில், கூட்டம் கட்டுக்கடங்காமல் போன பிறகும் ஏன் உரையைத் தொடர்ந்தீர்கள், தாமதத்துக்கு திட்டமிட்ட காரணம் எதுவும் உண்டா, தாமதமாகும் தகவலை மக்களுக்கு ஏன் அறிவிக்கவில்லை, போலீஸார் கொடுத்த பாதுகாப்பு வழிமுறைகள் மீறப்பட்டதா என்பது உட்பட பல்வேறு கேள்விகளை அதிகாரிகள் எழுப்பியதாக சொல்லப்படுகிறது.

அதோடு, இந்த விபத்துக்கு யார் மீதாவது சந்தேகம் இருக்கிறதா, அதற்கு என்ன ஆதாரங்கள் இருக்கிறது என்பதையும் கேட்டிருக்கிறார்கள். விஜய் எழுப்பிய சந்தேகத்தின் அடிப்படையில் அடுத்து சில மூவ் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் ஒரு சில கேள்விகளுக்கான ஆதாரங்களை சமர்ப்பிக்க விஜய் தரப்பில் கூடுதல் அவகாசம் கேட்கப்பட்டதாகவும் சொல்லப்படுகிறது. அவை எழுத்துபூர்வமாக சமர்ப்பிக்க இருக்கிறாராம்.

விஜய் எழுப்பிய புகாரின் அடிப்படையில் திமுக புள்ளிகள் மற்றும் தமிழக காவல் துறை உயர் அதிகாரிகளிடம் இந்த வாரம் விசாரணை நடப்பதற்கு வாய்ப்பு உண்டு என்று சொல்லப்படுகிறது. திமுக புள்ளிகள் விசாரணைக்கு டெல்லிக்கு அழைக்கப்பட்டால் இந்த வழக்கு வேறு ஒரு திசையில் பயணப்பட்டு, தேர்தலில் எக்கச்சக்க பரபரப்பைக் கிளப்பும் என்கிறார்கள்.

பார்க்கலாம். 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share via
Copy link