Share via:
எடப்பாடி பழனிசாமி தலைமையில் இருக்கும் வரை கூட்டணிக்குப் போகவே
மாட்டேன் என்று சத்தியம் செய்த டிடிவி தினகரன் இன்று எந்த நிபந்தனையும் இல்லாமல் தேசிய
ஜனநாயகக் கூட்டணியில் இணைகிறார்.
இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய தினகரன், ‘’அமமுகவுக்கு
மாத்திரமல்ல தமிழ்நாட்டுக்கே நல்லதொரு ஆட்சிக்கான தொடக்கத்தை நோக்கி அதில் நாங்களும்
பங்கு பெறுவதற்காக மக்கள் விரும்புகிற ஒரு நல்லாட்சியை தமிழகத்தில் உருவாக்குவதற்கான
முயற்சிக்கு நாங்களும் உறுதுணையாக இருப்பதற்காக எங்கள் ஆதரவை தெரிவிப்பதற்காக இப்போது
நாங்கள் புறப்பட்டு செல்கிறோம்.
ஒண்ணே ஒண்ணு சொல்றேன். விட்டுக்கொடுத்து போகிறவர்கள் என்றைக்கும்
கெட்டுப் போவதில்லை. என்னதான் இருந்தாலும் இது ஒரு பங்காளி சண்டைதான். எங்களுக்குள்
உள்ள சண்டையை நாங்கள், “இன்னா செய்தாரை ஒறுத்தல் அவர் நாண நன்னயம் செய்துவிடல்’ என்று
சொல்லி ஏற்கெனவே பொதுக்குழுவிலேயே நான் சொன்னேன். அதனால் நாம் பழசையே நினைச்சுட்டு
கட்சி நலனையும் தமிழ்நாட்டு நலனையும் பின்னுக்கு தள்ளிவிடக்கூடாது என்கிற ஒரு பொது
நோக்கத்தோடு நாங்கள் விட்டுக்கொடுப்பதால் கெட்டுப்போவதில்லை.
எல்லாவற்றையும் இணைக்கிற சக்தியாகிய அம்மாவின் தொண்டர்கள் என்ற
வழியில் ஓரணியில் திரண்டு தமிழகத்தில் மீண்டும் அம்மா ஆட்சி வருவதற்கு நாங்கள் உறுதுணையாக
இருப்போம் என்பதுதான் எங்கள் நிலைப்பாடு…’ என்று கூறியிருக்கிறார்.
இன்று பியூஷ் கோயலை சந்தித்து முறைப்படி இணைகிறார். இவரையடுத்து
சசிகலாவும் தேர்தலுக்கு குரல் கொடுக்க இருப்பதாக சொல்லப்படுகிறது. என்.டி.ஏ. கூட்டணிக்கு
பிரசாரமும் செய்ய சசிகலா சம்மதம் தெரிவித்துள்ளாராம்.
