News

விஜய் அவசரக் கூட்டம். பனையூரில் விவசாயிகள் சந்திப்பு..?

Follow Us

மத்திய பாஜகவுக்கு ஆதரவு ஏடான இந்தியா டுடே நடத்தியிருக்கும் கருத்துக்கணிப்பு, பிரதமர் மோடியின் செல்வாக்கு உயர்ந்திருப்பதாகவும் தமிழ்நாட்டில் மட்டும் ராகுல் காந்திக்கு செல்வாக்கு உயர்ந்திருப்பதாகவும் சர்வே வெளியிட்டுள்ளது.

கடந்த 2025-ம் ஆண்டு டெல்லி மற்றும் பீகார் மாநிலத் தேர்தல்களில் வெற்றி பெற்ற பா.ஜ.க தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி (என்.டி.ஏ), 2026-ம் ஆண்டையும் மும்பை மாநகராட்சி (பி.எம்.சி) மற்றும் மகாராஷ்டிரா உள்ளாட்சி தேர்தல்களில் மாபெரும் வெற்றியுடன் தொடங்கியுள்ளது. இந்நிலையில், இன்று மக்களவைத் தேர்தல் நடத்தப்பட்டால் மீண்டும் என்.டி.ஏ. ஆட்சியைக் கைப்பற்றும் என்று ‘மூட் ஆஃப் தி நேஷன்’ கருத்துக் கணிப்பு தெரிவிக்கிறது.

தேசிய ஜனநாயகக் கூட்டணி இப்போது தேர்தல் நடந்தால் 352 இடங்களை வெல்லும் என கணிக்கப்பட்டுள்ளது. இது 2024 தேர்தலில் மோடி முன்வைத்த ‘400 பார்’ (400 இடங்கள்) இலக்கை விடக் குறைவு என்றாலும், வாக்காளர்களின் நம்பிக்கை குறையவில்லை என்பதைக் காட்டுகிறது.

இண்டியா (INDIA) கூட்டணி, கடந்த 2024 தேர்தலில் 234 இடங்களை வென்று ஆச்சரியமளித்த இந்தியா கூட்டணி, இப்போது தேர்தல் நடந்தால் 182 இடங்களாக வீழ்ச்சியடையும் என கணிக்கப்பட்டுள்ளது.

இந்தக் கணிப்பின்படி காங்கிரஸ் கட்சி 80 இடங்களை மட்டுமே பெறும் என்று தெரிகிறது. இது கடந்த ஆகஸ்ட் மாதக் கணிப்பான 97 இடங்களை விடக் குறைவு. பாஜக மீது காங்கிரஸ் முன்வைக்கும் “வாக்குத் திருட்டு” (Vote Chori) போன்ற புகார்கள் மக்களிடம் பெரிய அளவில் தாக்கத்தை ஏற்படுத்தவில்லை என்பதை இந்தத் தரவுகள் உணர்த்துகின்றன.

கட்சி வாரியாகப் பார்த்தால், பா.ஜ.க தனித்து 287 இடங்களை வென்று பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்க வாய்ப்புள்ளதாகக் கணிப்பு கூறுகிறது இந்தக் கணிப்பு முடிவுகள் மேற்கு வங்கம், தமிழ்நாடு, கேரளா, அசாம் மற்றும் புதுச்சேரி ஆகிய 5 மாநிலங்களில் 2026-ல் நடைபெற உள்ள சட்டசபைத் தேர்தல்களில் பா.ஜ.க.விற்கு மிகப்பெரிய ஊக்கத்தை அளிக்கும். குறிப்பாக, இதுவரை ஆட்சிக்கு வராத கேரளா, தமிழகம் மற்றும் வங்காளத்தில் பா.ஜ.க தீவிரமாகப் போட்டியிட இது வழிவகுக்கும்.

தமிழ்நாட்டில் மக்களவைத் தேர்தல் நடந்தால்திமுக கூட்டணியே வெற்றி பெறும். 45% வாக்குகளுடன் தி.மு.க கூட்டணி 38 தொகுதிகளில் வெல்லும் எனவும், 33% வாக்குகளுடன் அ.தி.மு.க கூட்டணி ஒரே ஒரு தொகுதியில் மட்டுமே வெற்றி பெறும் எனவும் கணிக்கப்பட்டுள்ளது. த.வெ.க 15% வாக்குகளைப் பெறும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது முழுக்க முழுக்க நாடாளுமன்றத் தேர்தல் சர்வே என்றாலும், இதை சட்டமன்றத் தேர்தல் சர்வே என்று திமுகவினர் சந்தோஷமாக பரப்பிவருகிறார்கள். திமுகவினருக்கு இங்கிலீஸ் படிக்கத் தெரியாதா என்று கிண்டலடிக்கிறார்கள். 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share via
Copy link