Share via:
திமுகவினர் ஒவ்வொரு நாளும் என்ன செய்வார்களோ என்ற பயத்தில் எனக்கு
தூக்கமே வருவதில்லை. இனி தவறு செய்தால் சர்வாதிகாரியாக மாறி நடவடிக்கை எடுப்பேன் என்று
ஸ்டாலின் வீரவசனம் பேசினார். ஆனால், ஒரு எம்.எல்.ஏ.வே அடியாளாக மாறி ஊடகத்தினரை அடித்துத்
துவைத்த பிறகும் ஸ்டாலின் அமைதி காக்கிறார்.
கரூர் மாவட்டம் கிருஷ்ணராயபுரத்தில் முறைகேடாக கனிம வளங்கள் கொள்ளையடிக்கப்பட்ட
குவாரிக்கு கடந்த 2022 ஆம் ஆண்டு 23.25 கோடி அபராதம் விதிக்கப்பட்டது. இந்நிலையில்
அந்த குவாரி முறைகேடாக செயல்பட்டு வந்தது.
இந்த கனிம வளம் கொள்ளை போவதை களத்திற்கு சென்று நியூஸ் தமிழ் திருச்சி
நிருபர் கதிரவன், ஒளிப்பதிவாளர் செபாஸ்டின் செய்தியாக்க முற்பட்டிருக்கிறார்கள்.
கரூர் மாவட்டம் சீராயபுரம் அய்யர்மலை அருகே சிவாயம் என்ற இடத்தில்
திருச்சி ஸ்ரீரங்கம் தொகுதி திமுக எம்எல்ஏ பழனியாண்டி மற்றும் 50 பேர், நிருபர் கதிரவன்
ஒளிப்பதிவாளர் செபாஸ்டின், வழக்கறிஞர் திருமலைராஜா, சமூக ஆர்வலர் சுடலைக்கண்ணு ஆகியோர்
மீது கற்கள் மற்றும் உருட்டு கட்டைகளால் கொலை வெறி தாக்குதல் நடத்தியுள்ளனர்.
ஸ்ரீரங்கம் தொகுதி திமுக எம்எல்ஏ பழனியாண்டி அவரது மகன் சகோதரர்கள்
மற்றும் 20 பேர் செய்தியாளர் மற்றும் கேமராமன் மீது கொலை வெறி தாக்குதல் நடத்தியதாக
கதிரவன் எழுத்து மூலம் குளித்தலை காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார்.
மதியம் சுமார் ஒன்றரை மணிக்கு அவர்கள் தாக்கப்பட்ட தகவல் கிடைத்தது.
சம்பவ இடத்தில் கார் மட்டும் நிற்க , நிருபர், ஒளிப்பதிவாளர் நிலை என்ன என்று தெரியவில்லை.
செய்தியாளர் மற்றும் கேமராமேன் ஆகியோரை எம்எல்ஏ தரப்பினர் கடத்தி வைத்திருந்தது.
பல லட்ச ரூபாய் மதிப்புள்ள கேமரா, டிரோன் கேமரா அந்த வெறி கொண்ட
கும்பலால் அடித்து நொறுக்கி சின்னாபின்னமாக்கப்பட்டுள்ளது. இரண்டு மணி நேரத்திற்கு
பிறகு குவாரியில் அவர்கள் மீட்கப்பட்டுள்ளார்கள்.
தற்போது திருச்சி அரசு தலைமை மருத்துவமனையில் அவர்கள் சிகிச்சையில்
உள்ளார்கள்.
தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சிக்கு வந்த போது, தான் இரும்புக்கரம்
வைத்திருப்பதாக முதலமைச்சர் ஸ்டாலின் சொன்னார். காவல்துறையை தன் கட்டுப்பாட்டில் வைத்திருக்கும்
அவர், தன்னுடைய இரும்புக்கரத்தை இப்போதும் பயன்படுத்தவில்லை என்றால் எதற்கு.?
ஸ்டாலின் ஒரு டம்மி பீஸ் என்பது தெளிவாக உணர்த்தியிருக்கிறது இந்த
சம்பவம்.
