Share via:
அதிமுக ஆட்சியில் இருந்தபோது டாஸ்மாக் மூட வேண்டும் என்று ஸ்டாலின்
போராட்டம் நடத்தினார். அதேபோன்று எதிர்க்கட்சித் தலைவராக மு.க.ஸ்டாலின் இருந்தபோது,
‘தைப் பொங்கலுக்கு அரசு 5 ஆயிரம் ரூபாய் தரவேண்டும்’ என்று போர்க்கொடி எழுப்பினார்.
இப்போது ஆட்சியில் இருக்கும் நிலையில், திமுக அரசு பொங்கல் பரிசு பணம் கொடுப்பது குறித்து
இன்னமும் வாய் திறக்கவே இல்லை. கப்சிப் என்று அமைதியாக இருக்கிறது.
ஸ்டாலின் வைத்த வேண்டுகோளை இப்போது அதிமுக பொதுச்செயலாளரும் எதிர்க்கட்சித்
தலைவருமான எடப்பாடி பழனிசாமி அவரது எழுச்சிப்பயணத்தில் வலியுறுத்தி வருகிறார். ஆட்சி
முடியப்போகும் கடைசி காலகட்டத்திலாவது மக்களுக்கு நன்மை செய்யும் எண்ணத்துடன்
5,000 ரூபாய் தைப் பொங்கலுக்குக் கொடுக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்துவருகிறார்.
இபிஎஸ் எண்ணத்தைப் பிரதிபலிக்கும் வகையில் இன்று ராயப்பேட்டை பகுதிகளில்
அதிமுகவினர் பொங்கல் தொகுப்புடன் 5 ஆயிரம் ரூபாய் தரவேண்டும் என்று போஸ்டர் ஒட்டியுள்ளனர்.
இந்த போஸ்டர் அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. ஸ்டாலின்
5 ஆயிரம் ரூபாய் தரவேண்டும் என்று மக்களும் கேட்கத் தொடங்கியிருக்கிறார்கள்.
தைப் பொங்கல் தொகுப்பும் தரவேண்டும் என்று கோரிக்கை வைக்கிறார்கள்.
என்ன செய்யப்போகிறார் ஸ்டாலின்..?