Share via:
பாஜக ஆளும் உத்தரப் பிரதேசம் சிறப்பாக உள்ளது. திமுக ஆளும் தமிழ்நாடு
மோசமாக உள்ளது என்று சொன்ன காங்கிரஸ் பிரவீன் சக்கரவத்திக்கு ஆதரவாக விடுதலை சிறுத்தைகள்
மற்றும் கம்யூனிஸ்ட் கட்சியைக் கண்டித்த மாணிக்கம் தாகூரை திமுக ரெட் மார்க் செய்துள்ளது.
விஜய் கூட்டணிக்காக திமுக கூட்டணியை உடைக்கப் பார்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளன.
பிரவீன் சக்கரவர்த்திக்கு ஆதரவாக மாணிக்கம் தாகூர், ‘’காங்கிரஸ்
தனது உள்கட்சி விஷயங்களை எப்படி நடத்த வேண்டும் என்று கூட்டணி கட்சிகள் உத்தரவிடத்
தொடங்கியது எப்போது? தங்களது உள்கட்சி விஷயங்களில் இதுபோன்ற பொது கருத்துக்களை இக்கட்சிகள்
ஏற்றுக்கொள்வார்களா?’’ என்று விடுதலை சிறுத்தைகள், கம்யூனிஸ்ட் கட்சிகளைப் போட்டுத்
தாக்கியிருந்தார்.
இதற்கு விடுதலை சிறுத்தைகள் ரவிக்குமார் ஏற்கெனவே விளக்கம் அளித்துவிட்டார்.
அதாவது, கட்சி நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று நான் சொல்லவில்லை என்று பேசியிருந்தார்.
இதற்குப் பிறகும் மாணிக்கம் தாகூர் அந்த பதிவை நீக்கவில்லை. இதையடுத்து அவரை விடுதலை
சிறுத்தைகள் கட்சியினரும் கம்யூனிஸ்ட்களும் போட்டு வெளுக்கிறார்கள்.
இது குறித்து பேசும் கம்யூனிஸ்ட்கள், ‘’மாணிக்கம் தாகூருக்கு திமுகவை
கண்டிக்க திராணி இருக்கின்றதா…? கனிமொழி அவர்களுடைய பதிவை RT செய்து பிரவீன் சக்கரவர்த்தி
பின்னூட்டம் அளித்ததற்கு முதல் முதலில் கண்டனத்தை பதிவு செய்தவர்களே திமுகவினர் தான்.
மேலும் செல்வப்பெருந்தகை, அவர்களும் ஜோதிமணி அவர்களும் பிரவீன் சக்கரவர்த்தி அவர்களுடைய
பதிவை கண்டித்ததற்கு, “காங்கிரஸ்காரர்களே கண்டித்து விட்டார்கள்…. பிரவீன் சக்கரவர்த்தி
ஒரு சங்கி…” என்று உங்கள் உட்கட்சி விவகாரத்தை மிகைப்படுத்தியவர்களே திமுகவினர்
தான். எனவே திமுக’வை கண்டிக்க திராணியில்லாமல் விசிக, கம்யூனிஸ்ட், மதிமுகவை கண்டிப்பதிலிருந்தே
நீங்கள் காங்கிரஸ் கட்சியின் சுயமரியாதையை திமுகவிடம் அடகு வைத்து விட்டீர்கள் என்பது
நன்கு தெரிகின்றது.
பிரவீண் சக்கரவர்த்தி, மாணிக்கம் தாகூரை திட்டினாலோ, மாணிக்கம்
தாகூர், பிரவீண் சக்கரவர்த்தியை திட்டினாலோ அது காங்கிரஸின் உட்கட்சி விவகாரம். அதைப்
பற்றி யாரும் கவலைப்பட போவது இல்லை. ஆனால் தமிழ்நாட்டைப் பற்றி ஒரு அவதூறை பரப்பினால்
அது காங்கிரஸின் உட்கட்சி விவகாரம் இல்லை..’’ என்று கொதிக்கிறார்கள்.
விஜய் கூட்டணிக்குப் போகவேண்டும் என்று காங்கிரஸில் ஒரு டீம் இருக்கிறது,
அதற்கு மாணிக்கம் தாகூரே தலைவர் என்கிறார்கள். ஸ்டாலினுடன் மோதினால் என்னாகும் என்பதை
விரைவில் மாணிக்கம் தாகூர் தெரிந்துகொள்வார் என்கிறார்கள். காங்கிரஸ் கலாட்டா என்னவாகும்
என்று வேடிக்கை பார்க்கலாம்.