News

விஜய் அவசரக் கூட்டம். பனையூரில் விவசாயிகள் சந்திப்பு..?

Follow Us

விஜய் படத்தின் ஜனநாயகன் டிரெய்லர் வெளியாகியுள்ளது. அதில், விஜய்யின் சுற்றுப்பயணக் காட்சிகள் இடம் பெற்றுள்ளதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. அதேநேரம், விஜய் கட்சியுடன் கூட்டணி இல்லை என்று கேட்டை இழுத்து மூடியிருக்கிறது காங்கிரஸ்.

இது குறித்து நேற்றைய தினம் கிரிஷ் ஜோடங்கர் செய்தியாளர்களிடம் பேசினார்.  சட்டமன்ற தேர்தல் கூட்டணி பேச்சுவார்த்தையின் போது ஆட்சியில் பங்கு எனும் கோரிக்கை திமுகவிடம் முன்வைக்கப்படுமா? தமிழ்நாட்டில் ஆட்சியில் பங்கு வேண்டும் எனும் நிலைப்பாட்டில் காங்கிரஸ் உள்ளதா எனவும் செய்தியாளர்கள் கேள்வி கேட்டனர்.

அதற்கு ஜோடங்கர், ‘’எந்த கட்சியாவது ஆட்சியில் பங்கு வேண்டாம் என கூறுவார்களா? ஆட்சியில் பங்கு வேண்டாம் என கூற காங்கிரஸ் என்ன என்ஜிஓ வா நடத்துகிறது…’’ என்று கேட்ட்டார்.

அதோடு, ‘’திமுகவுடன் கூட்டணி இல்லை என்று காங்கிரசில் யாராவது கூறினார்களா?  திமுக நம்பகத்தன்மையுள்ள கூட்டணி கட்சி என்பதால்தான் , திமுகவுடன் கூட்டணி என்று முடிவெடுத்ததால் தான் ஒரு மாதம் முன்னதாக முதலமைச்சரை சென்று சந்தித்தோம். விரைவில் தொகுதிப்பங்கிடு தொடர்பாக திமுக நல்ல முடிவு எடுக்கும் என நம்புகிறோம். காங்கிரஸ் எத்தனை தொகுதிகளில் போட்டி என்பதை மிக விரைவில் தெரிவிப்போம்’’ என்று கூறினார்.

இதையடுத்து விஜய் கூட்டணி பற்றி கேட்டதற்கு, ‘’காங்கிரஸ் – தவெக பேச்சுவார்த்தை என ஆதவ் அர்ஜூனா கூறுவதை பற்றி எல்லாம் நான் என்ன சொல்ல முடியும்? பிரவீண் சக்ரவர்த்தி சென்று விஜயை சந்தித்தது தமிழ்நாட்டில் யாரோ ஒருவர் யாரையோ ஒருவரை சந்தித்துள்ளார் என்று தான் பார்க்க முடியும்.  காங்கிரஸ் 3 அமைச்சர் பதவி மற்றும் 38 தொகுதிகள் கேட்பதாக டைம்ஸ் ஆஃப் இந்தியாவில் வந்துள்ள செய்தி குறித்து செய்தியாளரிடம் தான் கேட்க வேண்டும்’ என்று ஒட்டுமொத்தமாக விஜய் கட்சியுடன் உள்ள கூட்டணியை போட்டு உடைத்துவிட்டார்.

இந்த நிலையில், விஜய்யின் கடைசி படமான ஜனநாயகன் டிரெய்லர் வெளியாகியுள்ளது. இதில் விஜய் நடத்திய ரோடு ஷோ இடம் பெற்றுள்ளதாக குற்றம் சாட்டுகிறார்கள். அதேபோல் அருண்ராஜ் நடித்திருப்பதும் விமர்சனமாகியுள்ளது.

இதில் காட்டப்படுவது எல்லாம் விஜய் ரோடு ஷோ காட்சிகள் என்றால், சிபிஐ விசாரணை சிக்கலாக வாய்ப்பு உண்டு என்கிறார்கள். பார்க்கலாம். 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share via
Copy link