Share via:
அரசியல் மீட்டிங்கை தடுத்து நிறுத்த முயற்சித்த முதல்வர் ஸ்டாலினுக்கு
மேடையிலே ஸ்டாலின் அங்கிள் என்று மிரட்டல் விடுத்தார் விஜய். இப்போது ஜனநாயகன் படத்தை
திட்டமிட்டு தள்ளி வைத்திருக்கும் அமித்ஷாவுக்கு மேடையில் எப்படி எச்சரிக்கை செய்வாரோ
என்று அவரது ரசிகர்கள் ஆர்வமாக காத்திருக்கிறார்கள்.
ஜனநாயகன் தயாரிப்பு நிறுவனமான கேவிஎன் புரொடக்ஷன்ஸ், ‘’எங்கள்
அன்பிற்குரிய ரசிகர்களுக்கு ஒரு வருத்தமான செய்தி. ஜனவரி 9-ம் தேதி வெளியாகவிருந்த
‘ஜன நாயகன்’ திரைப்படம், சில தவிர்க்க முடியாத காரணங்களால் தள்ளிவைக்கப்பட்டுள்ளது.
இந்தப் படத்திற்காக நீங்கள் எவ்வளவு ஆவலாகக் காத்திருக்கிறீர்கள் என்பதை நாங்கள் அறிவோம்.
இந்த முடிவை எடுப்பது எங்களுக்கு மிகவும் கஷ்டமாக இருந்தது. புதிய வெளியீட்டுத் தேதி
விரைவில் அறிவிக்கப்படும்…’’ என்று அறிவித்துள்ளது.
அதேநேரம், ஜனநாயகன்’ திரைப்படத்திற்காக திரையுலகினர் குரல் கொடுக்கவில்லை
என்று பலரும் குறை கூறுகிறார்கள். என்ன பிரச்னை என்று விஜய் இன்னமும் வாய் திறக்கவில்லை.
சினிமா துறையில் இருக்கும் யாருக்கு என்ன சிக்கல் வந்தாலும் வாயே திறக்காத நடிகர் தான்
விஜய் என்கிறார்கள். பொங்கல் விடுமுறை திரையரங்க வசூல் திரைத்துறைக்கு மிகவும் முக்கியம்.
இந்த இழப்புக்குக் காரணமான அமித்ஷாவை விஜய் சும்மா விட மாட்டார்.
மேடையில் ஏறி அமித்ஷாவை நாக்கைப் பிடுங்கிக்கொள்வது போன்று கேள்விகள்
கேட்பார் என்கிறார்கள். அதேநேரம், விஜய்யை தங்கள் கூட்டணிக்குக் கொண்டுவரும் முயற்சி
என்று சிலரும், இந்த படம் இன்னும் தாமதமாகவும், தனியாகவும் வருவது தேர்தலுக்கு பயன்படும்.
அதனாலே விஜய் அமைதியாக இருக்கிறார் என்றும் சொல்கிறார்கள்.
வேடிக்கை பார்க்கலாம்.