Share via:
தைப்பொங்கல் வெளியீடு என்று 9ம் தேதிக்கு ஜனநாயகன் டிக்கெட் விற்பனை
தொடங்கிய நிலையிலும் சென்சார் சர்டிஃபிகேட் கிடைக்கவில்லை. ஏ சர்டிஃபிகேட் மட்டுமே
பஞ்சாயத்து என ஒரு குரூப் கூறிவரும் நிலையில், பாஜகவும் விஜய்யும் சேர்ந்தே பரபரப்பு
கிளப்புவதாகவும் தகவல்கள் பரவுகின்றன.
இது குறித்து பேசுபவர்கள், ‘’ஜனநாயகன் படத்தில் வன்முறையும் ரத்தம்
சிந்தும் காட்சிகளும் ஓவரோ ஓவர் என்பதால் ஏ சர்டிஃபிகேட் கொடுக்க சென்சார் முடிவெடுத்திருக்கிறார்கள்.
இதை தயாரிப்பு தரப்பு ஏற்காமல் கோர்ட்டுக்கு போவோம் என்று அதிரடி காட்டியதால் படத்தை
ரிவைசிங் கமிட்டிக்கு அனுப்பிவிட்டதாக கூறப்படுகிறது.
நீதிமன்றத்தில் வழக்கு போடப்பட்டிருக்கும் நிலையில், இது பாஜகவும்
விஜய்யும் இணைந்து நடத்தும் நாடகம் என்று திமுகவினர் பேசுகிறார்கள்.
இதுகுறித்து, ‘’பாஜக – தவெக இணைந்து நடத்தும் நாடகம் ஜனநாயகன்
திரைப்படம் பகவந்த் கேசரி என்ற தெலுங்கு படத்தின் ரீமேக் என்பது சந்தேகத்திற்கு இடமின்றி
உறுதியாக விட்டது.. பகவந்த் கேசரிக்கு சென்சார் கொடுக்க முடியும் என்றால் ஜனநாயகனுக்கும்
கொடுக்க முடியும்.. அப்படி இருந்தும் இழுத்தடிப்பது ஏனென்றால் ஜனநாயகனுக்கான எதிர்பார்ப்பு
பெரிய அளவில் இல்லாமல் போனது.
மேலும் பராசக்தி திரைப்படத்தின் டிரைலர் ஜனநாயகனை விட அதிக பார்வையாளர்களைப்
பெற்றுள்ளது… படமாகவும் ஜனநாயகனை விட பராசக்தி அதிக வரவேற்பை பெற்றால் அது முதல்வர்
கனவில் வலம் வரும் விஜய்க்கு பெரும் பின்னடைவு. ஏதாவது செய்து பரபரப்பை அதிகப்படுத்தி
விஜய் படத்திற்கு வரவேற்பு குறையாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். அதனால்தான் படத்திற்கு
சென்சார் பிரச்னை, படம் வெளியாகும் போது விஜய் சிபிஐ விசாரணைக்கு ஆஜராவது என எல்லா
நாடகங்களும் அரங்கேற்றப்படுகின்றன. அதேநேரம் இந்த பிரச்னைகளை எல்லாம் திமுகதான் செய்கிறது
என்று போலியான நரேட்டிவ் செய்கிறார்கள். இந்த நாடகமெல்லாம் எடுபடவே செய்யாது’’ என்கிறார்கள்.