Share via:
உச்சநீதிமன்றத்துக்குப் போனால் ஜனநாயகனுக்கு விமோசனம் கிடைக்கும்
என்று நினைத்தார் விஜய். ஆனால், ‘ஜன நாயகன்’ பட சென்சார் விவகாரத்தில் தொடுக்கப்பட்ட
மேல்முறையீட்டு வழக்கை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்து தைப் பொங்கலை ஸாரி பொங்கலாக்கியிருக்கிறது.
தணிக்கை சான்றிதழ் கிடைப்பதில் தாமதமான காரணத்தால் ரிவைசிங் கமிட்டிக்குப்
போகாமல் உயர்நீதிமன்றத்தை நாடியது படக்குழு. வழக்கை விசாரித்த தனிநீதிபதி பி.டி.ஆஷா,
ஜனநாயகனுக்கு சென்சார் சான்றிதழ் வழங்க உத்தரவிட்டார். தணிக்கை வாரியத்திற்கு அவகாசம்
வழங்காமல் தனிநீதிபதி எப்படி தீர்ப்பு வழங்கலாம் எனக் கூறி, தலைமை நீதிபதி அமர்வு உத்தரவை
ரத்து செய்துவிட்டது.
இதனால், திட்டமிட்டபடி ஜனநாயகன் படம் பொங்கலுக்கு வரமுடியாமல்
போனது. இதையடுத்து உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வின் உத்தரவை எதிர்த்து தயாரிப்பு
நிறுவனம் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது. அதேசமயம் தணிக்கை வாரியம் தரப்பில்
உச்சநீதிமன்றத்தில் கேவியட் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதில், ஜனநாயகன் பட தணிக்கை
சான்றிதழ் வழக்கில் தங்களின் வாதங்களைக் கேட்காமல் எந்த உத்தரவும் பிறப்பிக்கக் கூடாது
எனக் கோரிக்கை வைக்கப்பட்டது.
இதையடுத்து ஜனநாயகன் பட மேல்முறையீட்டு வழக்கை, இன்று காலை நீதிபதிகள்
தீபங்கர் தத்தா மற்றும் அகஸ்டின் ஜார்ஜ் அமர்வு விசாரித்தது. பின்னர், ‘’சென்னை உயர்நீதிமன்றத்தின்
அமர்விலேயே வாதத்தை முன்வைக்க தயாரிப்பு நிறுவனத்துக்கு அறிவுறுத்திய நீதிபதிகள் மேல்முறையீட்டு
மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர். அதோடு இந்த வழக்கில் தலையிட விரும்பவில்லை என்று
கூறிய உச்ச நீதிமன்ற நீதிபதிகள், ஜனநாயகன் தொடர்பான வழக்கை 20-ம் தேதிக்குள் முடிக்க
வேண்டும்’’ என்று சென்னை உயர் நீதிமன்றத்துக்கு உத்தரவிட்டனர்.
இந்த விஷயம் விஜய் கட்சியினரை பெரும் சோகத்துக்கு ஆளாக்கியுள்ளது.
இந்நிலையில் நேற்று சகாயம் ஐஏஎஸ் விஜய் கட்சியில் இணைவதற்கு வாய்ப்பு இருப்பது போன்று
பேசியிருந்தார்.
அதாவது அவர், ‘’நல்லவர்கள் எல்லாம் அரசியல் வேண்டாம் ஒதுங்கி போனதன்
விளைவு இன்று திருடர்களும் , குற்றவாளிகளும் இந்த புனிதமான அரசியலை வியபாரமாக மாற்றி
வைத்துள்ளார்கள் அதிகாரம் மிக வலிமையானது அதை அடைந்தால் எல்லா பிரச்சனைகள் தீரும்”
என்று கூறியிருக்கிறார்.
என்னமோ நடக்கப்போகுது.
