Share via:
வழக்கமாக தமிழகத்துக்கு ராகுல்காந்தி வருகிறார் என்றால் சமூகவலைதளங்களில்
திமுக ஆதரவு பலமாக இருக்கும். ஆனால், ஜனநாயகன் படத்துக்கு ஆதரவாக ட்வீட் போட்டது மட்டுமின்றி
காங்கிரஸ் கட்சித் தலைவர்கள் விஜய் கூடாரத்துக்கு பல்லக்கு தூக்குவது காரணமாகவே எண்ணமோ,
ராகுல் வருகையை திமுகவினர் கண்டுகொள்ளவே இல்லை.
நேற்று நீலகிரியின் கூடலூர் பகுதியில் உள்ள ஒரு தனியார் பள்ளிக்கு
வருகை புரிந்த ராகுல், குழந்தைகளுடன் பொங்கல் பண்டிகையை கொண்டாடினார் . பின்னர் மழை
பெய்ய துவங்கியது, இருப்பினும் கொட்டும் மழையிலும் ராகுல் காந்தி மாணவர்கள் மத்தியில்
உரை நிகழ்த்தினார்.
’’போட்டிகள் நிறைந்த இந்த உலகத்தில் தகவல்கள் சார்ந்து மட்டுமே
இயங்காமல், சமூகத்தை பற்றிய அக்கறையும், அறிவையும், ஞானத்தையும் பெறுவதையும் குழந்தைகள்
முதன்மையாக கொள்ள வேண்டும்.
இங்கு யார் நல்ல ஆசிரியர்? என்ற ஒரு கேள்வியை எழுப்பினேன் அதற்கு
ஆலீஸ் டீச்சர் என்றார்கள். ஏன் என்று கேட்டதற்கு ஆலீஸ் டீச்சர் கனிவானவர், அன்பானவர்,
நாங்கள் கூறுவதை கவனிப்பார் என மாணவர்கள் கூறினார்கள்’’ என்றவர் அந்த ஆசிரியரைப் பாராட்டினார்.
பெண்கள் குறித்து கேட்கப்பட்ட கேள்விக்கு பதில் அளித்த ராகுல்,
’’நான் சிறுவனாக இருந்தபோது எனது பாட்டி தான் எங்கள் வீட்டின் தலைவர் நான் எனது தாய்
மற்றும் சகோதரியை பார்த்துதான் வளர்ந்தேன். ஆண்களை விட பெண்கள் சிறப்பானவர்’’ என பேசியிருந்தார்.
இந்த விழாவில் திமுக சார்பில் ஆ.ராசா கலந்துகொண்டிருந்தார் என்றாலும்
திமுகவினர் திரண்டு வந்து ராகுலுக்கு ஆதரவு வழங்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
கூட்டணி உடைசல் உறுதியாகிறதா..?.