Share via:
ஜெயலலிதா பாணியில் முதன்முதலாக விருப்ப மனு வாங்கியது மட்டுமின்றி,
மனு அளித்தவர்களை நேர்காணல் அழைத்து பேசிவருகிறார் எடப்பாடி பழனிசாமி. இன்று நான்காவது
நாளாக நேர்காணல் நடத்த இருக்கிறார்.
விருப்ப மனு வாங்கியவர்களுடன் கலந்துரையாடல் நடத்திய எடப்பாடி
பழனிசாமி, ‘’ அதிமுக கூட்டணியில் புதிய கட்சி விரைவில் இணைய இருக்கிறது. அதோடு மேலும்
சில கட்சிகளுடன் கூட்டணி பேச்சு வார்த்தை நடத்தி வருகிறோம். நமது கூட்டணி மெகா கூட்டணியாகவும்
வலிமையான கூட்டணியாகவும் அமையும். எனவே நமக்கு
வெற்றி நிச்சயம், நம்பிக்கையோடு இருங்கள்’’ என்று உறுதி கொடுத்திருக்கிறார்.
அதோடு, ‘’அதிமுக தனி பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கும் என்றும்,
அதிமுக தலைமை யாரை வேட்பாளராக நிறுத்தினாலும் அவர்களை பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில்
வெற்றி பெறச் செய்ய வேண்டும்’’ என்றும் எடப்பாடி பழனிசாமி அளித்த தகவல், தொண்டர்களிடையே
மகிழ்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.
புதிய கட்சி என்று இபிஎஸ் குறிப்பிட்டது டாக்டர் ராமதாஸ் அல்லது
பிரேமலதா ஆகிய இருவரில் ஒருவர் என்றே அதிமுகவினர் கருதுகிறார்கள். ஏனென்றால் டிடிவி
தினகரன் நேரடியாக பாஜகவுடன் பேச்சுவார்த்தை நடத்திவருகிறார்.
பிரேமலதாவுக்கு 6 + 1 சீட்டு, ராமதாஸ்க்கு 6 சீட்டு என்று பேச்சுவார்த்தை
தொடங்கியுள்ளது. பிரதமர் வருகைக்கு முன்னர் இந்த பேச்சுவார்த்தை இறுதிக் கட்டத்தை அடைந்துவிடும்
என்று சொல்லப்படுகிறது.
பார்க்கலாம்.