News

விஜய் அவசரக் கூட்டம். பனையூரில் விவசாயிகள் சந்திப்பு..?

Follow Us

தமிழ்நாட்டில் முக்கிய பதவிகளில் இருக்கும் சில ஐபிஎஸ் அதிகாரிகள்
ஓய்வு பெறவுள்ள நிலையில் தமிழக அரசுப் பணியிட மாற்றம் தொடர்பான அறிவிப்புகளை வெளியிட்டுள்ளது.
இதில் டேவிட்சன் தேவாசீர்வாதம் ஆயுதப்படை டிஜிபியாக, சந்தீப் மிட்டல் சைபர் கிரைம்
டிஜிபியாக, பால நாகதேவி பொருளாதாரக் குற்றப்பிரிவு டிஜிபியாக பதவி உயர்வு பெற்றுள்ளனர்.
இது, இந்த பணியிட மாற்றங்கள் நாளை முதல் அமலுக்கு வரவுள்ள நிலையில், இவர்களுக்குப்
புத்தாண்டு பரிசு கிடைத்திருக்கிறது.

அதன்படி ஏடிஜிபியாக இருந்து வந்த டேவிட்சன் தேவாசீர்வாதத்திற்கு
தற்போது டிஜிபியாக பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது. அவர் ஆயுதப்படை டிஜிபியாக நியமனம்
செய்யப்பட்டுள்ளார். அதேபோல ஏடிஜிபி சந்தீப் மிட்டலும் டிஜிபியாக பதவி உயர்வு வழங்கப்பட்டு
சைபர் கிரைம் டிஜிபி பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.

அந்த வரிசையில், ஏடிஜிபி பால நாகதேவியும் டிஜிபியாக பதவி உயர்வு
பெற்றுள்ளார். இவர் பொருளாதாரக் குற்றப்பிரிவு டிஜிபியாக நியமிக்கப்பட்டுள்ளார். அதேபோல
சிபிசிஐடி ஐஜி அன்பு பதவி உயர்வு பெற்று சிபிசிஐடி ஏடிஜிபியாக நியமிக்கப்பட்டுள்ளார்.
தென்மண்டல ஐஜியான பிரேம் ஆனந்த் சின்கா, ஏடிஜிபியாக பதவி உயர்வு பெற்று ஆவடி காவல்
ஆணையராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

மகேஷ்வர் தயாள், சிறைத் துறையிலிருந்து மாற்றப்பட்டு சட்டம்-ஒழுங்கு
ஏடிஜிபியாக நியமனம் செய்யப்பட்டுள்ளார். ஆவடி காவல் ஆணையராக உள்ள சங்கர், சிறைத் துறை
ஏடிஜிபியாக நியமிக்கப்பட்டுள்ளார்.

அதேபோல மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு ஏடிஜிபியான அமல்ராஜ், தாம்பரம்
காவல் ஆணையராக மீண்டும் நியமிக்கப்பட்டுள்ளார். சிலைக் கடத்தல் தடுப்புப் பிரிவு ஐஜியான
அனிஷா உசேன், பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றத் தடுப்புப் பிரிவு ஏடிஜிபியாக
நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

கோவை மாநகர காவல் ஆணையராக இருந்து வரும் சரவண சுந்தர், மேற்கு
மண்டல ஐஜியாக நியமனம் செய்யப்பட்டுள்ளார். அதேபோல விழுப்புரம் மாவட்ட எஸ்பியாக உள்ள
பி.சரவணன், திருநெல்வேலி சரக டிஐஜியாக நியமிக்கப்பட்டுள்ளார்.

அதேபோன்று தலைமையிட ஏ.டி.ஜி.பி-யாக டி.செந்தில்குமார் நியமனம்
செய்யப்பட்டுள்ளார். காவல்துறை நலப்பிரிவு ஏ.டி.ஜி.பி-யாக, மகேந்தர் குமார் ரத்தோட்,
செயலாக்க பிரிவு ஏ.டி.ஜி.பி-யாக, நஜ்முல் ஹூடா நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

அமலாக்கப் பணியகம் சிஐடி பிரிவின் ஏ.டி.ஜி.பி-யாக, அபின் தினேஷ்
மொடக், சிறைத்துறை இயக்குநராக சங்கர், தமிழ்நாடு போலீஸ் அகாடமியின் ஏ.டி.ஜி.பி-யாக
தினகரன் நியமனம், மாநில குற்ற ஆவண காப்பக பிரிவின் ஐ.ஜி-யாக, சோனல் சந்திரா, நிர்வாகப்பிரிவு
ஐ.ஜி-யாக மகேஸ்வரி நியமனம், விரிவாக்கப்பிரிவு ஐ.ஜி-யாக தேன்மொழி IPS நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

மண்டல ஐ.ஜி மாற்றங்கள் வரிசையில் மத்திய மண்டல ஐ.ஜி-யாக, பாலகிருஷ்ணன்,
 தென்மண்டல ஐ.ஜி-யாக, விஜயேந்திர பிதாரி, மேற்கு
மண்டல ஐ.ஜி-யாக, சரவணசுந்தர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

மாநகர காவல் ஆணையர் வரிசையில் தாம்பரம் மாநகர ஆணையரகத்துக்கு அமல்ராஜ்,
கோவை மாநகர ஆணையரகத்துக்கு கண்ணன்,திருநெல்வேலி மாநகர ஆணையரகத்துக்கு மணிவண்ணன் ஆகியோர்
நியமனம் ஆகியுள்ளனர்.

சென்னை பெருநகர காவல்துறையில் தலைமையிட கூடுதல் ஆணையராக, ஜோஷி
நிர்மல் குமார், தென் மண்டலம்(சட்டம்-ஒழுங்கு) கூடுதல் ஆணையராக நரேந்தரின் நாயர், சென்னை
வடக்கு (சட்டம்-ஒழுங்கு) இணை ஆணையராக திஷா மிட்டல், சென்னை மேற்கு (சட்டம் – ஒழுங்கு)
இணை ஆணையராக உமா மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

தலைமையிட இணை ஆணையராக மகேஷ்வரன், அடையாறு துணை ஆணையராக, ஏ.சி.கார்த்திகேயன்,
கீழ்ப்பாக்கம் துணை ஆணையராக கீதா நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

சரக டி.ஐ.ஜிக்கள் மாற்றம் செய்யப்பட்டுள்ள வகையில் காஞ்சிபுரம்
சரக டி.ஐ.ஜி-யாக சசாங் சாய், ராமநாதபுரம் சரக டி.ஐ.ஜி-யாக தேஷ்முக் சேகர் சஞ்சய், விழுப்புரம்
சரக டி.ஐ.ஜி-யாக அற.அருளரசு, திருநெல்வேலி சரக டி.ஐ.ஜி-யாக பி.சரவணன், திண்டுக்கல்
சரக டி.ஐ.ஜி-யாக சாமிநாதன், சேலம் சரக டி.ஐ.ஜி-யாக சந்தோஷ் ஹதிமானி ஆகியோர் நியமனம்
செய்யப்பட்டுள்ளனர்.

மாவட்ட எஸ்.பி மாற்றங்கள் வரிசையில் விழுப்புரம் எஸ்.பி-யாக, சாய்
பிரனீத், திருநெல்வேலி எஸ்.பி-யாக, பிரசன்ன குமார், செங்கல்பட்டு எஸ்.பி-யாக, சிபின்,
நாகப்பட்டினம் எஸ்.பி-யாக, பல்லா கிருஷ்ணனன், பெரம்பலூர் எஸ்.பி-யாக, அனிதா, கள்ளக்குறிச்சி
எஸ்.பி-யாக, எஸ்.அரவிந்த், தென்காசி எஸ்.பி-யாக, ஜி.எஸ்.மாதவன்,  தூத்துக்குடி எஸ்.பி-யாக, சிலம்பரசன் ஆகியோர் நியமனம்
செய்யப்பட்டுள்ளனர்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share via
Copy link