News

விஜய் அவசரக் கூட்டம். பனையூரில் விவசாயிகள் சந்திப்பு..?

Follow Us

பாஜகவால் நுழையவே முடியாத இரண்டு மாநிலங்கள் என்று கேரளா மற்றும் தமிழ்நாட்டை சொல்லிக்கொண்டு இருந்தார்கள். இப்போது உள்ளாட்சித் தேர்தலில் திருவனந்தபுரத்தை பாஜ கைப்பற்றிவிட்டது. அடுத்து தமிழகம்தான் என்று தாமரைக் கட்சியினர் குஷியாகிறார்கள்.

இந்த தோல்வி குறித்து அரசியல் ஆர்வலர்கள், ‘’ஒருபுறம் அதானி, அம்பானிகளை வசைபாடிக் கொண்டே, மறுபுறம் தாங்கள் ஆளும் கேரளாவில் அதே அதானி, அம்பானிகளுக்கு வெண்சாமரம் வீசுவது, தொழிலாளர்களை சுரண்டுகிறார்கள் என்று புலம்பிக்கொண்டே, தங்கக் கடத்தலில் ஈடுபடுவது, இந்திய பங்கு சந்தையை விமர்சித்துக் கொண்டே, வெளிநாட்டு மசாலா பங்குகளை பெற்று பண மோசடியில் ஈடுபடுவது, ஜனநாயகம் என்று சொல்லிக்கொண்டே, அடக்குமுறையை கட்டவிழ்த்து விடுவது, சமத்துவம் என்று பேசிக் கொண்டே, கொள்கை எதிரிகளை படுகொலைகள் பல செய்து வன்முறை வெறியாட்டத்தை அரங்கேற்றுவது என இரட்டை வேடம் போட்டு வந்த கம்யூனிஸ்டுகளின் இரட்டை நிலைப்பாட்டுக்கு முடிவுரை எழுதியுள்ளனர் கேரள மக்கள்.

திரிபுரா, மேற்கு வங்கம் போன்ற மாநிலங்களையடுத்து கொஞ்சநஞ்சம் ஒட்டிக்கொண்டிருந்த கம்யூனிஸ்டுகளின் மூச்சுக் காற்றை ந்உள்ளாட்சி தேர்தலில் விரட்டியடித்து விட்டார்கள் கேரள மக்கள். இந்தியாவில் கம்யூனிஸம் முற்றிலும் ஒழிக்கப்பட்டு விட்டது…’’ என்கிறார்கள்.

45 ஆண்டு கால பாஜகவின் கனவை பாஜக எம்.பி.யான சுரேஷ் கோபியாலே முறியடிக்கப்பட்டது என்கிறார்.  இஸ்லாமியர்களுக்கு எதிராக கிறிஸ்தவர்கள் திரண்டதே இந்த வெற்றிக்குக் காரணம் என்கிறார்கள். ஏனென்றால் இங்கு 70% பேர் கிறிஸ்துவ வகுப்பை சேர்ந்தவர்கள்.

கேரள தேர்தல் முடிவு இதுதான். கேரளா உள்ளாட்சித் தேர்தல் நிலவரம்..

மாநகராட்சி : காங்கிரஸ் கூட்டணி: 4 கம்யூனிஸ்ட் கூட்டணி :1 பிஜேபி கூட்டணி :1

மாவட்ட பஞ்சாயத்து :14 காங்கிரஸ் கூட்டணி:8 கம்யூனிஸ்ட் கூட்டணி:6 பாஜக கூட்டணி: 0

நகராட்சி : 87 காங்கிரஸ் கூட்டணி : 54 கம்யூனிஸ்ட் கூட்டணி : 28 பாஜக கூட்டணி : 2

ஊராட்சி ஒன்றியம் : 152 காங்கிரஸ் கூட்டணி :79 கம்யூனிஸ்ட் கூட்டணி :62 பிஜேபி கூட்டணி:

ஊராட்சிகள் : 941 காங்கிரஸ் கூட்டணி : 456 கம்யூனிஸ்ட் கூட்டணி: 371 பாஜக கூட்டணி : 28

இது மாபெரும் வெற்றி இல்லை என்றாலும் குறிப்பிடத்தக்க வெற்றி.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share via
Copy link