Share via:
எங்களுக்கு ஆட்சியை விட தன்மானமே முக்கியம் என்று சென்னை பொதுக்கூட்டத்தில்
எடப்பாடி பழனிசாமி ஆவேசமாகப் பேசினார். அதன் பிறகு டெல்லிக்குச் சென்ற எடப்பாடி பழனிசாமி
துணை ஜனாதிபதியாக பதவி ஏற்றிருக்கும் சிபி ராதாகிருஷ்ணனை சந்தித்து வாழ்த்து தெரிவித்தார்.
இதையடுத்து இரவு அமித்ஷாவுடன் சந்திப்பு நடைபெற்றது. இந்த சந்திப்புக்குப்
பிறகு செய்தியாளர்களை எடப்பாடி பழனிசாமி சந்திக்கவில்லை. அதேநேரம், வெள்ளை காரில் உள்ளே
போன எடப்பாடி வேறு ஒரு காரில் வெளியேறியதாகவும், பத்திரிகையாளர்களுக்கு முகம் தெரியக்கூடாது
என்பதற்காக முகத்தை மறைத்துக்கொண்டு வெளியே போனதாகவும் திட்டமிட்டு செய்திகள் பரப்பப்படுகின்றன.
இது குறித்து அதிமுகவினர் கடுமையாக ரியாக்ட் செய்துவருகிறார்கள்.
’’எடப்பாடியார் டெல்லி சென்றாலே பயந்து நடுங்கும் திமுக மற்றும் திமுக ஆதரவு ஊடகங்களுக்கு..
முகத்தை துடைப்பதை, முகத்தை மூடிக்கொண்டு செல்வதாக Fake Narative செட் பண்ணும் வேலைகள்
ஈடுபடும் திமுகவிற்கு.. எடப்பாடியார் ஒன்றும் ஆட்சிக்கு வருவதற்கு முன் கருப்பு
balloonனை பறக்க விட்டு; ஆட்சிக்கு வந்த பின் வெள்ளை குடையுடன் செல்லவில்லை.
வெளிப்படையாக மாண்புமிகு உள்துறை அமைச்சரை சந்திக்க சென்றார் என்பது
நாடறியும். சந்திப்பு முடிந்ததும் முகத்தை மூடிக்கொண்டு செல்லும் அவசியம் அவருக்கில்லை.
கவர்ச்சிகரமான வாக்குறுதிகளை அளித்து, ஆட்சிக்கு வந்த பின் எந்த ஒரு வாக்குறுதியும்
நிறைவேற்றாத நீங்கள் தான் முகத்தை மூடிக்கொள்ள வேண்டும்.
தமிழகத்தில் சட்டம் ஒழுங்கை பாதுகாக்க முடியாமல் சிறுவர் முதல்
கிழவி வரை நடமாட பயப்படும் நிலையை உருவாக்கிய நீங்கள் தான் முகத்தை மூடிக்கொள்ள வேண்டும்
தேர்தல் வருகிற நிலையில் மக்களை எதிர்கொள்ள முடியாமல் நீங்கள்தான் முகத்தை மூடிக்கொள்ள
வேண்டும் சந்திப்பின் நிகழ்வுகளை மாண்புமிகு எடப்பாடியார் ஊடகங்களை சந்தித்து விபரிக்கும்
போது நீங்கள் முகத்தை மறைத்து திருப்பிக் கொண்டுதான் செல்ல வேண்டும்.’’ என்று கொதித்திருக்கிறார்கள்.