Share via:
கரூர் நெரிசல் மரணங்களில் புதுப்புது வகையில் சந்தேகம் எழுப்பினார்
டிஜிட்டல் ஊடகத்தைச் சேர்ந்த ஃபிலிக்ஸ். அதாவது, 12 பேர் மேல கத்திய வெச்சி குத்தி
கிழிச்சிருக்கானுங்க, – ஒரு அம்மா மேல வண்டி விழுந்துடுச்சு, அவங்கள காப்பாற்றாமல்
மிதிச்சிருக்கானுங்க, – கழுத்தை மிதிச்சி கொலை பன்னிருக்கானுங்க என்றெல்லாம் பேசியதற்காக
கைது செய்யப்பட்டிருக்கிறார்.
இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் நபர்கள், ‘’பேரணியின் போது செருப்புகள்
மற்றும் கற்களை வீசியவர்களை அடையாளம் காண திமுக தவறியது. டிவிகே தொண்டர்களை கத்தியால்
தாக்கியவர்களை கண்டறியத் தவறியது. பொதுமக்களிடையே தள்ளுமுள்ளு ஏற்படுத்தியவர்களை அடையாளம்
காணவும் தவறியது, திமுக. 40 உயிர்களை பரிகொடுத்த நிகழ்வில், இதற்குக் காரணமானவர்களைப்
பற்றி கவலை இல்லை.. ஆனால், பேச்சு சுதந்திரம் சார்ந்த கருத்து தெரிவித்த பத்திரிகையாளர்
& யூடியூபர் ஃபெலிக்ஸ் கைது செய்யப்பட்டார்.
திமுகவையும் செந்தில் பாலாஜியையும் யாரும் சந்தேகிக்க கூடாதா?
திமுகவை எதிர்த்து யாரும் பேசக்கூடாதா? பேசினால், திமுக அவர்களை தனிப்பட்ட முறையில்
தாக்கி மிரட்டல் விடுக்கிறது. திமுக போலியான தகவல்களைப் பரப்பவில்லையா? அவர்கள் போலியான
கதைகளை அமைக்கவில்லையா? இது அவர்களின் நடத்தை மற்றும் ஆட்சி திறனை வெளிப்படையாகக் காட்டுகிறது’’
என்கிறார்கள்.
இந்த நிலையில் இன்று ட்வீட் போட்டுள்ளார். அதாவது காவல் துறை தடியடி
நடத்த்யதுதான் காரணம் என்றும் தமிழகத்தில் புரட்சி வெடிக்கும் என்று ஆதவ் அர்ஜூனா ஒரு
ட்வீட் போட்டுள்ளார்.
இந்த விஷயம் நெகடிவாகாக மாறியதும் உடனடியாக அழித்திருக்கிறார்.
இது குறித்து பேசுபவர்கள், ‘’தன்னை பெரிய சாணக்கியன், அரசியல் வித்துவான் என்று நினைத்துக்கொண்டு,
அதையே நம்பும் பிரச்னை அவருக்கு. முட்டுச் சந்தில் தனது அலுவலகம் இருப்பது மாதிரி,
விஜயை ஒருநாள் முட்டுச் சந்திற்கு கொண்டு வந்து நிறுத்துவார் என்று நான் ஏற்கனவே சொன்னேன்.
அதைதான் இப்போது செய்துகொண்டிருக்கிறார். கரூரில் 42 பேர் செத்தது ஆதவிற்கு போதாது.
அதுதான் புரட்சியை தூண்டுகிறார். இப்படி கலவரத்தை தூண்டுவதுதான் உங்கள் ஜனநாயகமா ஆதவ்?
கலவரம் வெடித்தால் எத்தனை உயிர் போகும் என்று தெரியுமா?’’ என்று கேள்வி எழுப்புகிறார்கள்.