Share via:
அதிமுக ஒற்றுமையாக இருக்க வேண்டும் என்று குரல் கொடுத்த மூத்த தலைவர் செங்கோட்டையனுடைய பதவிகளை புடுங்கிப் போட்டிருக்கிறார் எடப்பாடி பழனிசாமி. இதையடுத்து, டெல்லியில் போய் ஒப்பாரி வைத்திருக்கிறார் செங்கோட்டையன்.
சசிகலா, டிடிவி தினகரன், ஓ.பன்னீர்செல்வம் ஆகியவர்களை எப்படியாவது மீண்டும் கட்சிக்குள் நுழைத்துவிட வேண்டும் என்று எத்தனையோ பேர் முயற்சி செய்தார்கள். எல்லோருக்கும் எடப்பாடி பழனிசாமி டாட்டா காட்டிவிட்டார்.
இந்த தேர்தலுக்குள் கட்சிக்குள் நுழையவில்லை என்றால் தங்கள் அரசியலுக்கு எண்ட் கார்டு கிடைத்துவிடும் என்பதால் எல்லோரும் ஒன்று சேர்ந்து செங்கோட்டையனை களத்தில் இறக்கிவிட்டார்கள்.
மன்னிப்பு கேட்டுக்கொள்கிறோம் என்று இறங்கிவரும் நிலையிலும் பிடிவாதம் பிடிப்பது நல்லது இல்லை, எல்லோரையும் சேர்த்துக்கொள்ள வேண்டும் என்று எடப்பாடிக்கு 10 நாள் கெடு விதித்தார் செங்கோட்டையன். இந்த கெடு ஆரம்பிப்பதற்குள் செங்கோட்டையனை கட்சியிலிருந்து விரட்டிவிட்டார். செங்கோட்டையனுக்கு ஆதரவு கொடுத்தவர்களையும் விரட்டிவிட்டார்.
இதையடுத்து டெல்லிக்குச் சென்று அமித்ஷாவையும் நிர்மலா சீதாராமனையும் சந்தித்துப் பேசியிருக்கிறார் செங்கோட்டையன். இந்த விவகாரம் அதிமுகவில் அனலை உருவாக்கியிருக்கிறது. செங்கோட்டையனை அமித்ஷா சந்தித்ததில் எடப்பாடிக்கு கொஞ்சமும் உடன்பாடு இல்லை என்பதால் கூட்டணி உடையுமா என்பதே இப்போது கேள்வியாகியுள்ளது.
செங்கோட்டயனுக்கு அடுத்து அமித்ஷாவா..?

