Share via:
பிரதமர் நரேந்திர மோடி அறிவித்திருக்கும் ஜிஎஸ்டி வரி சலுகை இன்று
முதல் அமலாகிறது. மக்களுக்கு இனி கையில் நிறைய பணம் மிச்சமாகும் என்று கூறியிருக்கிறார்.
அதேநேரம், நீண்ட காலமாக வாகனம் மற்றும் எலக்ட்ரானிக்ஸ் பொருட்கள் விற்பனை குறைந்துவிட்டது.
எனவே, கார்ப்பரேட் கம்பெனிகளுக்காகவே இந்த சலுகையை அறிவித்திருக்கிறார் என்று எதிர்ப்புக்
குரல் கேட்கிறது.
இதுகுறித்து பேசுபவர்கள் ‘’கடந்த 8 ஆண்டுகளாக ஜி. எஸ். டி வரி
கொடுமையால் மக்களின் தூக்கத்தை கெடுத்து சிவராத்திரி ஆக்கியதற்கு யார்
பொறுப்பு? ஊடகங்களை எப்போதுமே சந்திக்க மறுக்கிற பிரதமர் தொலைக் காட்சியில் வழக்கம்
போல ஒருவழி உரை நிகழ்த்துகிறார்.
ஜி.எஸ்.டி வரிக் குறைப்பால் பெண்கள் விவசாயிகள் நடுத்தர வர்க்கத்தினர்
பயன் பெறுவார்கள்… ஒவ்வொரு குடும்பமும் மகிழ்ச்சி அடையும்… எனப் பிரதமர் நமக்குப்
புரியாத இந்தியில்… இருக்கட்டும் பிரதமரே. இத்தனை ஆண்டுகளாக யார் விவசாயிகளை, பெண்களை,
நடுத்தர வர்க்கத்தை வறுத்து எடுத்தது? யார் குடும்பங்களின் மகிழ்ச்சியை குலைத்தது?
நவராத்திரி துவக்க நாளில் ஜி.எஸ்.டி சலுகை அமலாகிறதாம். 8 ஆண்டுகளாக
நீங்களே வறுத்து நீங்களே குலைத்து தூக்கத்தை கெடுத்து எத்தனை இரவுகளை சிவராத்திரிக்கள்
ஆக்கினீர்கள் . அதற்கெல்லாம் மக்களிடம் மன்னிப்பு கேட்பீர்களா? இப்பவும் வசூல் செய்கிற
மொத்த ஜி. எஸ்.டி இல் நீங்கள் கொடுத்திருக்கிற சலுகை எத்தனை சதவீதம்?
இத்தனை ஆண்டுகள் மக்களிடம் “கொள்ளை” அடித்து விட்டு
இப்போது தரும் அற்ப சலுகைக்கு இவ்வளவு ஆரவாரமா? இந்த சலுகையால் முழு நன்மையும் உங்கள்
கார்ப்பரேட் நண்பர்களுக்குத்தானே போய் சேரப்போகிறது. அதற்கு ஏன் இந்த ஆரவாரம்?’’ என்று
கேட்கிறார்கள்.