Share via:
தமிழக வெற்றி கழக தலைவர் விஜய் அவர்கள் கரூரில்
மேற்கொண்ட பரப்புரையின்போது கூட்ட நெரிசலில் சிக்கி 39 பேர் உயிரிழந்த சம்பவம் அனைவரையும்
சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
கொஞ்சமும் பொறுப்பு இல்லாமல் விஜய் நடந்துகொண்டார்
என்றாலும் போதுமான பாதுகாப்பு அளிக்க தவறிய காவல்துறையும் மாவட்ட, மாநில
நிர்வாகமும் நிச்சயம் பொறுப்பு கேள்வி கேட்க வேண்டியது முதல்வரின் கடமை. கரூரில் முன்னாள்
அமைச்சரின் முழுகட்டுபாட்டில் காவல்துறையும், மாவட்ட இயங்குகிறது என்பதையும் நாம் மறந்து
விடக் கூடாது.
இந்த நிலையில் சம்பவம் நடந்தது என்ன என்று சில தகவல்கள் கிடைத்திருக்கிறது.
மிகப்பெரும் அளவுக்குக் கூட்டம் கூடி நிற்கிறது. நீண்ட நேரமாக காத்திருந்த மக்கள் விஜய்
வரும் போது அந்த பஸ்ஸுக்கு இடம் விட வேண்டிய சூழல் ஏற்படுகிறது. எனவே கன்சோல் ரூமுக்குள்
ஓடியவர்கள் தள்ளு முள்ளு ஏற்பட்டு பஸ் உள்ளே வரும் போதே மயங்கி விழுந்திருக்கிறார்கள்.
சிலர் மயக்கமடைவதைப் பார்த்தவுடன தவெக நிர்வாகிகள் விஜய்க்குத்
தகவல் தெரிவித்தனர். சாதாரண மயக்கம் என்று நினைத்து தண்ணீர் பாட்டிலை தூக்கி வீசியதுடன்
தன்னுடைய வேலை முடிந்துவிட்டது என்று விஜய் நினைத்துவிட்டார்.
தவெகவினர் போட்டிருந்த தகர மறைப்பு பஸ் உள்ளே வர வர நெரிசல் தாங்க
மாட்டாமல் மக்கள் தகரத்தை உடைத்து உள்ளே விழுந்தார்கள். அதேபோன்று மாடியின் மீது ஏறியவர்கள்
பேலன்ஸ் இல்லாமல் கீழே விழ நெரிசல் இன்னும் அதிகமாகியது.
அவர்களை மீட்க வந்த ஆம்புலன்ஸை தவெகவினர் அடித்து நொறுக்கினர்..
காவல் துறை அவர்களை அகற்றி மயங்கியவர்களை மருத்துவ மனைக்கு அனுப்பியது. அதோடு நெரிசலில்
மக்கள் விழ விழ ஒருவரை ஒருவர் மிதித்து தொடர்ந்து விழுந்திருக்கறார்கள்.
இதையெல்லாம் விஜய் கவனத்திற்குப் போகவில்லை. அவரது நிர்வாகிகளும்
விஜய் பேசுவதை ரசித்தார்களே தவிர, மயங்கி விழுபவர்கள் பற்றியோ, அவர்களைக் காப்பாற்ற
வேண்டும் என்ற எண்ணமோ யாரிடமும் இல்லை. விஜய் பேசி முடித்து அங்கிருந்து நகர்ந்த பிறகே,
கீழே விழுந்து கிடந்தவர்களை கவனிக்க முடிந்தது. அதனாலே இத்தனை பெரிய உயிர் இழப்பு என்கிறார்கள்.
கூட்டத்தில் சிலர் மயங்கி விழுந்ததுமே விஜய் ரசிகர்களில் கொஞ்சம்
பேரை அடுத்த பாயிண்ட்டுக்குப் போகச்சொல்லியிருந்தால் இந்த நெரிசல் ஏற்பட்டிருக்காது,
மரணம் நிகழ்ந்திருக்காது என்கிறார்கள்.
காரணங்கள் எதுவாக இருந்தாலும் சரி இனியொரு துயரம் நடைபெறாமல் இருக்கட்டும்.