Share via:
டெல்லி சென்ற ஆதவ் அர்ஜூனாவுக்கு அமித்ஷாவை சந்திக்கும் வாய்ப்பு
கிடைக்கவில்லை என்று கூறப்படுகிறது. அதேநேரம், மதுரை மற்றும் சென்னை உயர்நீதிமன்றக்
கிளை கொடுத்த அதிரடி உத்தரவுகளை அடுத்து இன்று புஸ்ஸி ஆனந்த், நிர்மல் குமார் மற்றும்
ஆதவ் அர்ஜூனா கைது செய்யப்படுவது உறுதியாகியுள்ளது.
சென்னை உயர்நீதிமன்றமும் அதன் மதுரைக் கிளை இரண்டுமே இன்றைக்கு
தவெகவுக்கும், அதன் தலைவர் விஜய்க்கும், மற்ற நிர்வாகிகளுக்கும் எதிராக சாட்டையைச்
சுழற்றியிருக்கின்றன.
கரூருக்கு முன்பாக நாமக்கல்லில் பொது சொத்துக்கள் அழிக்கப்பட்டதுடன்
நாற்பதுக்கும் மேற்பட்டோர் மூச்சுத்திணறி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டதையும்
கண்டித்துள்ளது.
சிபிஐ விசாரணை உட்பட தமிழ்நாடு அரசுக்கு எதிராக தொடுக்கப்பட்ட
எல்லா வழக்குகளையும் உயர்நிதி மன்றம் ஜஸ்ட் லைக் தட் தள்ளுபடி செய்து விட்டு, இவர்கள்
மீது எல்லாம் ஏன் இன்னும் சட்டப்பூர்வ நடவடிக்க எடுக்கவில்லை என்று தமிழக அரசையும்
நீதிமன்றம் கேள்விக்கு உள்ளாக்கியிருக்கிறது.
ஆதவ் அர்ஜுனா மீது ஒரு மாபெரும் கண்டனம் தெரிவித்ததுடன் உடனடியாக
சட்ட நடவடிக்கை எடுக்க தமிழ்நாடு அரசுக்கு ஆணை பிறப்பித்ததோடு… இந்த கரூர் வழக்கை
விசாரிக்க வடக்கு மண்டல ஐஜி அஸ்ராகர்க் தலைமையில் சிறப்பு புலனாய்வு குழுவையும் அமைத்து
ஆணை பிறப்பித்துள்ளது.
அதோடு நடிகர் விஜய்யின் அந்த பிரச்சார பேருந்து பலரையும் இடித்துத்
தள்ளி சென்றுள்ளதற்கு பல்வேறு வீடியோ ஆதாரங்கள் இருந்தும், இன்னமும் ஏன் தமிழ்நாடு
அரசு அவர் மீது ஹிட் அண்ட் டிரைவ் வழக்குப் போட்டு உள்ளே தள்ளவில்லை என்று கடுமையாக
சாட்டையை அரசு நிர்வாகத்தின் மீதும் சுழற்றியிருக்கின்றது.
அரசு ஏன் இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை என்று பலரும் கேள்வி எழுப்பிவந்த
நிலையில், நீதிமன்ற உத்தரவின் பேரில் நடவடிக்கை எடுக்கப்படுகிறது. முன்கூட்டி நடவடிக்கை
எடுத்திருந்தால், ஸ்டாலின் பழி வாங்குகிறார் என்று பேசப்பட்டிருக்கும். இப்போது நீதிமன்ற
உத்தரவினால் நடப்பதால் யாரும் குறை சொல்ல முடியாது என்கிறார்கள்.
ஆக, இன்று விறுவிறு சம்பவங்கள் நடைபெற உள்ளன.