News

விஜய் அவசரக் கூட்டம். பனையூரில் விவசாயிகள் சந்திப்பு..?

Follow Us

விஜய் கூட்டத்தில் செருப்பு வீசப்பட்டதே இத்தனை ரகளைகளுக்கும் காரணம் என்று கூறப்பட்டு வரும் நிலையில், கத்திக்குத்து நடந்ததாக தெரிவிக்கப்பட்டு இருப்பது தமிழகத்தில் அதிர்ச்சியைக் கூட்டியுள்ளது. இந்த நிலையில் ஆதவ் அர்ஜூனா டெல்லிக்குப் போயிருப்பது திமுகவை பாஜகவும் தவெகவும் ஒன்று சேர்ந்து மிரட்டுவதாகவே கருதப்படுகிறது.

கரூரில் நடந்த தவெக கூட்டத்தில் ஏற்பட்ட துயர சம்பவத்தைப் பற்றி விசாரணை நடத்த பாஜகவால் அமைக்கப்பட்ட  ஹேமமாலினி தலைமையிலான எம்பிக்கள் குழு,  சம்பவம் நடந்த இடத்தை பார்வையிட்டது. இந்த சம்பவத்தால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருபவர்களையும், உறவினர்களை இழந்தவர்களையும் அவர்கள் நேரில் சந்தித்து பேசினர்.

அப்போது அவர்களிடம் பேசிய ஒரு பெண், “விஜய் வந்ததும் சிறிது நேரத்தில் மின்சாரம் துண்டிக்கப்பட்டது.  அதன் பிறகு கூட்டத்தில் புகுந்த சிலர், கத்தியால் பலரைத் தாக்கினார்கள். கழிவுநீர் கால்வாய் இருப்பது தெரிந்தும், சிலர் அதில் தங்களை தள்ளிவிட்டனர்’’ என்று தெரிவித்திருக்கிறார்.

இந்த நிலையில் கமாண்டோ பாதுகாப்புடன் டெல்லி போயிருக்கிறார் தவெக துணை பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜூனா. இந்த விவகாரம் சமூக வலைதளத்தில் வைரலாகிவருகிறது.

இது குறித்து பேசும் திமுகவினர், ‘’விஜய் பின்னே பாஜக இருக்கிறது என்று சொன்னபோது பலரும் நம்பவே இல்லை. இப்போது உண்மைகள் ஒவ்வொன்றாக வருகின்றன. அவசரம் அவசரமாக பாஜக கமிட்டி அமைக்கப்பட்டு திமுக மீது குற்றம் சுமத்தப்படுகிறது. அதேநேரம், மத்திய அரசு பாதுகாப்புடன் ஆதவ் அர்ஜூனா டெல்லிக்குப் போகிறார்.

விஜய் பஸ்ஸில் இருக்கும் சிசிடிவி ஃபுட்டேஜ் மற்றும் விஜய் குழுவினர் எடுத்த டிரோன் ஃபுட்டேஜ்களை காவல் துறை கேட்டுள்ளது. இதை கொடுக்காமல் விஜய் கட்சியினர் எஸ்கேப் ஆகிவருகிறார்கள்.

இனிமேல் இந்த விஷயத்தில் விஜய் ஆகும் வகையில், கரூர் மரணத்திற்கும்  விஜய்க்கும் சம்பந்தமே இல்லன்னு ஹேமமாலினி குழு அறிக்கைய சமர்ப்பிக்கும்,. வழக்கு சிபிஐ கைக்கு மாறுவதற்கு வாய்ப்பு உண்டு. அப்படி மாறிவிட்டால் பாஜக அடிமையாக மாற வேண்டிய கட்டாயம் விஜய்க்கு வந்துவிடும்’’ என்கிறார்கள்.

இந்த அலை இப்போதைக்கு ஓயப்போவதில்லை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share via
Copy link